இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் விளையாடி வரும் நிலையில், கடைசியாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சேடேஸ்வர் புஜாரா இந்திய அணி துபாயில் விளையாடுவது குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்கு சாதகம்
இந்தியா கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் விளையாட மறுத்ததை அடுத்து, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை லீக் சுற்றிலும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அந்த அணிக்கு அதிக நன்மை கிடைக்கிறது என பல முன்னாள் வீரர்கள் இது குறித்து விமர்சனம் செய்தனர். மற்ற அணிகள் பாகிஸ்தானில் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் போது இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது பெரிய சாதகமாக இருக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இது குறித்து புஜாரா சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதை நான் ஏற்கவில்லை
இதுகுறித்து அவர் பேசும் போது “சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த அட்டவணை வெளியிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாததற்கு ஒரே காரணம் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமே. இதில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து நடுநிலையான இடத்தை கண்டுபிடிக்க முயற்சித்தன. இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடுநிலையான இடத்தில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ளது.
இதையும் படிங்க:இந்திய அணி மட்டுமே தரமான கிரிக்கெட் ஆடுது.. மற்ற நாடுகள் பணத்தைதான் விரும்புறாங்க – பாக் முன்னாள் வீரர் பேட்டி
எனவே இது ஒரு நியாயமற்ற நன்மை என்று நான் நினைக்கவில்லை. இந்திய அணி ஒருவேளை தோற்று இருந்தால் அவர்கள் விளையாடினார்கள் என்று யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த விஷயத்தில் அவர்கள் தோற்றார்கள். எனவே இந்திய அணிக்கு இது சொந்த மைதானம் என்று தான் நினைக்கவில்லை” என்று புஜாரா பேசி இருக்கிறார். இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் கூட இதற்கு தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






