இந்திய அணி மட்டுமே தரமான கிரிக்கெட் ஆடுது.. மற்ற நாடுகள் பணத்தைதான் விரும்புறாங்க – பாக் முன்னாள் வீரர் பேட்டி

0
556

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருகிற ஞாயிற்றுக்கிழமை விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்தும் மற்ற கிரிக்கெட் நாடுகள் குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் முன்னாள் வீரர்

பிசிசிஐ முதலில் இந்திய அணியை சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அனுப்ப மறுத்த நிலையில், ஹைபிரிட் மாடல் மூலமாக துபாயில் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. அதன்படி இந்திய அணியும் துபாயில் விளையாடி வெற்றி பெற்று தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஆனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறி சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் நாடுகளில் இந்திய அணி தான் ஐசிசி கோப்பைகளை வெல்ல விளையாடுவதாகவும், மற்ற கிரிக்கெட் நாடுகளுக்கு சர்வதேச போட்டிகளை விட பிரான்சிஸ் டி20 லீக்குகளில் கிடைக்கும் பணம் தான் பெரிய விஷயமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சில விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணி ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதால் பணம் மட்டும் கிடைத்ததை தவிர வேறு எந்த பயனும் அடையவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

பணத்தை பெரிதாக விரும்புகிறார்கள்

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சென்றேன். அப்போது அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அந்த கிரிக்கெட் வாரியம் வீரர்களை அனுப்பியது. அவர்கள் நிதி ரீதியாக வலுவான வாரியம் அல்ல, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் பணத்தை விரும்புகிறது. அவர்கள் தங்கள் சி அணியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பயன்படுத்தி விளையாடினார்கள். அதற்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கூட அவர்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்பினார்கள்.

இதையும் படிங்க:விராட் கோலிக்கு மட்டும் இதை செஞ்சிருந்தா.. கண்டிப்பா நாங்க ஜெயிச்சிருப்போம் – முன்னாள் ஆஸி கேப்டன் கிளார்க்

பின்னர் எஸ்ஏ டி20 லீக் வந்த பிறகு அதை பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல பயன்படுத்த தொடங்கினர். அவர்கள் அதில் சமரசம் செய்ய விரும்பவில்லை. அதுதான் அவர்களின் கொள்கை. அதுவே எங்கள் வாரியத்தை பார்த்தால் நாங்கள் இரண்டு முறை ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டோம். அதில் எங்களுக்கு சிறிது பணம் கிடைத்ததை தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. இதில் வெற்றிக்காக விளையாடும் ஒரே அணி இந்தியா மட்டுமே. அவர்கள் ஐசிசி கோப்பைகளை வெல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்கள் யாரிடம் இருந்தும் எந்த உதவியும் பெறுவது இல்லை. அவர்கள் எதை சம்பாதித்தாலும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட் தரமாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -