இந்தியா மற்றும் இலங்கையில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆசிப் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. மேலும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் சுற்று உடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது.
2023 ஆசியக்கோப்பை தொடர்வதில் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் மீண்டும் வந்து விட்டதாகவும், மீண்டும் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க போகிறது என்றும் பலரும் கருத்து கூறி வந்தார்கள். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி சிறந்ததாக இருப்பதாக கருத்துக்கள் கூறப்பட்டது.
2023 ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலவீனங்களை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஆயுதமான வேகப்பந்துவீச்சு கூட்டணியை இந்தியா பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் முறியடித்தார்கள். இதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அடி மேல் அடியாக கிடைத்து வருகிறது. இறுதியாக சொந்த நாட்டில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த வீழ்ச்சி குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆசிப் “நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாடும் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை தொடரை நடத்திய காரணத்தினால் மட்டுமே அமெரிக்க அணி தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான அணி இருக்கிறது என்றால் அடுத்து 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் அமெரிக்க அணியிடம் மீண்டும் தோல்வி அடையும். இதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்”
இதையும் படிங்க : பாகிஸ்தானும் இந்த இந்திய வீரருக்குதான்.. எங்க நாட்டுல எங்க வீரர்களுக்கு மதிப்பில்லை – கம்ரன் அக்மல் பேட்டி
“2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் ஆகியோர் மாற்றப்பட வேண்டும். 20 வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஆனால் நாங்கள் மீண்டும் மீண்டும் இதை செய்யாமல் தவறு செய்கிறோம். இதனால்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற கிரிக்கெட் நாடுகள் வளர்ச்சி அடையும் பொழுது பாகிஸ்தான் ஒரே இடத்தில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.