எனக்கு புரியல.. ஐபிஎல்க்கு ஒரு நியாயம்.. உங்க நாடு இலங்கைக்கு ஒரு நியாயமா.. ஹசரங்கா மீது கம்ரான் அக்மல் விமர்சனம்

0
16486

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாட்டு வரும் நிலையில், அதில் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

அதில் இலங்கை அணி வீரர்களின் செயல்பாடு மோசமாக இருந்து வரும் நிலையில் குறிப்பாக ஆல்ரவுண்டர் வனிந்து ஹஸ்ரங்காவின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

கவனிக்கப்படும் வகையில் அணியில் மாற்றங்களை செய்து இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கிய இலங்கை அணி எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்க வேண்டிய இரண்டு போட்டிகளிலுமே தொடக்கம் நன்றாக இருந்த போதிலும் இறுதியில் சொதப்பியதால் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

அதில் குறிப்பாக ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா முதல் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு ரன்கள் இரண்டாவது போட்டியில் இரண்டு ஓவர்கள் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் பேட்டிங்கில் களமிறங்கி முதல் பந்தியிலேயே அவுட் ஆகி வெளியேறினார். இந்த தொடரில் மோசமாக செயல்பட்டு வருவதை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நீங்கள் இலங்கை அணிக்கு ஒரு கேப்டனாகவும், ஒரு மேட்ச் வின்னர் ஆகவும் இருந்திருக்கிறீர்கள். ஆனால் தற்போது அவர் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். களத்தில் அவர் சீரியஸாக இருப்பதை பார்க்க முடியவில்லை. அதுவே ஐபிஎல் மற்றும் எல்பிஎல் தொடர்களில் விளையாடும் போது அவரது அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை பார்த்திருக்கிறோம். அந்த அணிகளுக்காக அனைத்தையும் கொடுப்பார்.

அதுபோல உங்க நாட்டுக்காக விளையாடும்போதும் அதே வகையிலான அர்ப்பணிப்பு தேவை” என்று கூறி இருக்கிறார். பந்துவீச்சில் ஓரளவு நன்றாக செயல்படும் இலங்கை அணி அதுவே பேட்டிங்கில் தொடக்க வீரர்களைத் தவிர மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாராக விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் 140 ரன்கள் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் அடுத்த 30 ரன்களுக்கு 9 விக்கெட் பறி கொடுத்தது.

இதையும் படிங்க:ஒரு வீரர்.. 2 உலக கோப்பை.. கம்பீர் கண்டுபிடித்த தீர்வு.. நீண்ட நாள் பிரச்சனை முடிந்தது

மேலும் அடுத்த போட்டியிலும் இதே சூழ்நிலை தொடர்ந்தது. எனவே இலங்கை நிச்சயமாக பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது மிகவும் அவசியம். இன்று கடைசி டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியையாவது பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -