ஒரு வீரர்.. 2 உலக கோப்பை.. கம்பீர் கண்டுபிடித்த தீர்வு.. நீண்ட நாள் பிரச்சனை முடிந்தது

0
2264
Gambhir

தற்போது இந்திய அணி டி20 கிரிக்கெட் வடிவத்தில் உலக சாம்பியன் ஆக இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. எனவே டி20 உலகக்கோப்பையை தக்க வைக்க தலைமை பயிற்சியாளராகக் கம்பீருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. இதற்காக கம்பீர் நீண்ட நாட்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பவர் பிளே முடிந்து 40 ஓவர் வரையில் வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்கள் மட்டுமே நிற்க முடியும். அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் பவர் பிளேட் முடிந்ததும் வெளிவட்டத்தில் ஐந்து பீல்டர்கள் நிற்க முடியும். எனவே டி20 கிரிக்கெட்டில் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்படியான பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து இடங்களில் இருந்து கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் பொழுது, பேட்டிங் நீளத்தை 8 வரையில் நீட்டிக்க முடியும். மேலும் கூடுதல் ஆல் ரவுண்டர்கள் அணியில் இருந்தால், சூழ்நிலைக்கு தகுந்தபடி கேப்டன் பவுலிங் ரொட்டேஷன் செய்ய வசதியாக இருக்கும்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து இடங்களில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தது. குறிப்பாக இந்திய அணிக்கு பேட்டிங் யூனிட்டில் இருந்து ஒரு ஆப் ஸ்பின் பகுதிநேர பந்துவீச்சாளர் தேவைப்பட்டது. ஏனென்றால் ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் பேட்டிங் யூனிட்டில் இருந்து பகுதி நேர ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக கிடைப்பதால், அவர்களால் பிரதான சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவை மட்டுமே வைத்து விளையாட முடிகிறது. இடதுகை பேட்ஸ்மேன்கள் வரும் பொழுது மேக்ஸ்வெல் சுழல் பந்து வீச்சுக்கு தேவைப்படுகிறார். இப்படி ஒருவர் இல்லாததால் இந்திய டி20 அணியில் ஜடேஜா மற்றும் அக்சர் கடையில் போன்ற பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் விளையாட வேண்டியதாக இருந்தது.

இதையும் படிங்க : 61 ரன் 16 விக்கெட்.. உலக சாம்பியனை தோக்கடிச்சி இருக்கலாம்.. நீங்க அந்த லெவல் இல்ல.. இலங்கை மஹரூப் விமர்சனம்

தற்பொழுது கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்ததும் பேட்டிங் ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டரான ரியான் பராக்கை கொண்டு வந்திருக்கிறார். அத்தோடு அவரை டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளாமல், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம் பெற செய்திருக்கிறார். இரண்டு வெள்ளைப்பந்து அணிகளுக்குமே ரியான் பராக் கொடுக்கும் பந்துவீச்சு தேவையாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு இருந்து வந்த பிரச்சனைக்கு கம்பீர் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார். ரியான் பராக் தன்னை பேட்டிங்கில் நிரூபித்து விட்டால், நீண்ட காலம் இந்திய வெள்ளை பந்து அணிகளில் மிடில் வரிசையில் அவர் விளையாடுவார்!

- Advertisement -