நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 277 ரன்களைக் குவித்தது.
ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் (62), அபிஷேக் ஷர்மா (63),கிளாசன் (80),மற்றும் மார்க்கம் (42) ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பொதுவாக உலகெங்கிலும் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் லீக்குகள் பேட்டிங்க்கு சாதகமாக மட்டுமே இருப்பதாக சர்ச்சையான கருத்துக்கள் நிலவுகிறது. தற்போது ஐபிஎல்லும் இதற்கு விதிவிலக்கல்ல என்று நேற்று நடந்த போட்டி எடுத்துரைக்கிறது.
போட்டி பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் ஆட்டத்தை ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக மட்டுமே இருந்து விடக்கூடாது என ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வரை வீசிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
இதனால் பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத நேரத்தில் அவுட் ஆகவும் வாய்ப்பு உண்டு என்று அந்த விதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த விதிகள் எல்லாம் போட்டி நடக்கும் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே வேறுபடும். பிளாட் டிராக்குகள் எனப்படும் ஆடுகளத்தின் உயிரற்ற தன்மை அது பேட்ஸ்மேன்களுக்கு முற்றிலுமாகவே சாதகமாக போய் விடுகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தாலும், அதற்கு பின்னர் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் இலக்கினை நெருங்கி வந்து விட்டது. 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது.
எனவே தற்போது ஐபிஎல்லும் பேட்டிங்க்கு சாதகமாகவே மாறி வருவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஜூனைத்கான் ஐபிஎல் இன் தரத்தை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்
“தட்டையான ஆடுகளங்கள், சிறிய பௌண்டரி எல்லைகள், விரைவான அவுட்ஃபீல்டு. இதுதான் ஐபிஎல் என்று அழைக்கப்படுகிறது. இலக்கு 278. என ஐபிஎல்லின் தரத்தை விமர்சித்தும், கிண்டலாகவும் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 11 ஓவர்ல என்ன இது?.. ஹர்திக் பாண்டியா மோசமான கேப்டன்சி – யூசுப் பதான் நேரடி விமர்சனம்
பந்துவீச்சாளர்களுக்கு சிறிதும் சாதகமே இல்லாத பிளாட் டிராக்கில் விளையாடுவதும், குறைந்த தூரமே கொண்ட பவுண்டரி லைன்களில் தரமான ஐபிஎல் விளையாடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் போலவே தற்போது கிரிக்கெட் வல்லுனர்களும் இந்தியாவில் ஐபிஎல்லுக்காக அமைக்கப்பட்டு வரும் ஆடுகளங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் நடத்தப்படும் போட்டிகள் பெரும்பாலும் இவ்வாறு அமைவதில்லை. எடுத்துக்காட்டாக 2013ஆம் ஆண்டு பெங்களூர் அணி அடித்த 263 ரன்களையே 11 வருடங்கள் கழித்து தற்போதுதான் ஹைதராபாத் அணி அதை முறியடித்து இருக்கிறது. தற்போது இவரின் இந்த கருத்து ஐபிஎல் ரசிகர்களை கோபம் அடையச் செய்துள்ளது.