இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு மூன்று டெஸ்ட் போட்டியிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
விராட் கோலி கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்டு விட்டார் என்று அனைவரும் கருத்தினர். ஆனால் அதற்குப் பிறகு ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய பிறகும் தொடர்ந்து ஒரே முறையிலேயே ஆட்டம் இழந்து வருகிறார்.
விராட் கோலி தனது தவறை திருத்திக் கொள்ள முயற்சித்தாலும் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் அதே ஷாட் விளையாடச் சென்று ஆட்டமிழந்து விடுகிறார். இந்த நிலையில் இந்திய அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்காமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி விராட் கோலி நம்பர் 4ல் இருந்து ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
இது குறித்து பாசித் அலி கூறும் பொழுது “இந்திய அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் நிதிஷ்குமார் ரெட்டியை நான்காவது வரிசையிலும் விராட் கோலியை ஐந்தாவது வரிசையில் மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் விராட் கோலி நம்பர் 4ல் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து அதே முறையில் அவுட் ஆகி வருகிறார்.உங்களால் சிறப்பாக விளையாடி ரன்கள் அடிக்க முடியாவிட்டால் பேட்டிங் வரிசையை கீழே இறக்க வேண்டும்.
இதையும் படிங்க:இந்த இளம் குழந்தை ஒரு மேதை.. எங்க பவுலர்ஸ்க்கு பயப்படல.. அதனால இதை செய்யணும் – ஆஸி கிளார்க் பேட்டி
ரோஹித் சர்மா தாமாக முன்வந்து அதை செய்கிறார். ஆனால் விராட் கோலி பற்றி யாரும் நினைக்கவில்லை. ஏனென்றால் எல்லோரும் அதை செய்வதற்கு பயப்படுகிறார்கள்” என்று பாசித் அலி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். எனவே விராட் கோலி தனது தவறை சரி செய்து முக்கியமான அடுத்த போட்டியில் விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.