இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய அணி அடுத்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தோல்வியிலும் மூன்றாவது போட்டியில் டிரா மற்றும் நான்காவது போட்டியில் தோல்வியை தழுவி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இனி வருகிற ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை இழக்காமல் சொந்த நாடு திரும்பும். இந்தத் தொடரில் இந்திய அணிக்கு சோகமாக பல விஷயங்கள் நடந்தாலும் சில விஷயங்கள் நேர்மறையாகவும் நடந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஆல் ரவுண்டர் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் தனது சிறந்த பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் முதல் இன்னிங்ஸில் அபாரமான சதம் அடித்து போட்டி ஐந்தாவது நாள் வரை எடுத்துச் செல்வதற்கு இவரது பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் மொத்தமாக நிதிஷ்குமார் ரெட்டி 294 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இவரது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் இந்த இளம் குழந்தை ரெட்டி ஒரு மேதை. அவர் நிச்சயம் ஆறாவது அல்லது ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்தான் தற்போது இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்தவராக இருக்கிறார். 21 வயதில் இவர் செய்வது நம்ப முடியாத வகையில் இருக்கிறது. முழு தொடரிலும் இவர் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளார். அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார் எந்த ஆஸ்திரேலியா பந்துவீச்சாளரையும் கண்டு அவர் அஞ்சுவதில்லை.
இதையும் படிங்க:சிஎஸ்கே வீரர் செய்த ‘மான்கட்’.. ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்த ரியாக்சன்.. பிக்பாஸ் லீக் தொடர் 2024-25
பொறுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பொறுமையாக இருந்து அதற்குப் பிறகு அதிரடியாக பேட்டிங் செய்கிறார். குறிப்பாக மூன்று துறைகளிலும் சிறப்பாக விளங்குகிறார். பேட்டிங், பந்து வீச்சு ஃபீல்டிங் என அனைத்திலும். இந்திய அணிக்கு இந்த பையன் ஒரு நல்ல கண்டுபிடிப்பு. அவர் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய சரியான தேர்வாக இருப்பார். எனவே இந்திய அணி இதனை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






