14 வயசு சூரியவன்சியை.. பாகிஸ்தான்ல வெளிய தூக்கி எறிஞ்சிடுவாங்க.. காரணம் இதுதான் – பசித் அலி பேட்டி

0
246
Basit

நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் செயல்பட்டு வரும் அசாதாரணமான முறைக்கு, பாகிஸ்தானில் இருந்திருந்தால் அந்த நாட்டு மக்கள் என்ன கூறியிருப்பார்கள் என்பது குறித்து பசித் அலி பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுக்க முழுக்க இந்திய இளம் வீரர்களுக்கானதாக இருக்கிறது. இறுதியாக சிஎஸ்கே அணி வரையில் இளம் வீரர்கள் அபாரமான முறையில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

எங்கள் நாட்டில் தூக்கி எறிய சொல்லி இருப்பார்கள்

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் விதம் குறித்தும், அவர்கள் அச்சமின்றி விளையாடுவதற்கான முக்கிய காரணம் என்ன என்பது பற்றியும், பாகிஸ்தானில் இப்படியான திறமைகள் இருந்திருந்தால் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் பசித் அலி பேசி இருக்கிறார்.

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “14 வயது வைபவ் சூரியவன்சி முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த விதம் மிகப்பெரிய காரியம். அதுவே முதல் பந்தை அடித்து அவுட் ஆகி இருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்? பாகிஸ்தானாக இருந்திருந்தால் முதலில் அவரை தூக்கி வெளியே எறியுங்கள் என்று மக்கள் சொல்லி இருப்பார்கள். ஆனால் இப்படியான நம்பிக்கைகள் கொடுக்கப்படுகிறது. பின்பு அது பலன் தர ஆரம்பிக்கிறது”

- Advertisement -

இந்தியாவில் திறமைகள் வளர காரணம்

“இந்தியாவில் நீங்கள் திலக் ஜெய்ஸ்வால், அபிஷேக், கில் என இளம் வீரர்களை பாருங்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான நம்பிக்கையும் சுதந்திரமும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு பின்னால் அவர்கள் பெரிய வீரர்களாக மாறினார்கள். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருடனும் சேர்ந்து விளையாடினால் நிச்சயமாக அவர்கள் பெரிய வீரர்களாக மாறுவார்கள்”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025..கோடிக்கணக்கில் ஊதியம் பெற்றும் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள்:

“ஐபிஎல் தரத்தில் மிகச் சிறந்தது என்று நான் கூறும் பொழுதெல்லாம் என்னுடைய பாகிஸ்தான் சகோதரர்கள் அதை மோசமானதாக பார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் கையையும் நேரத்தையும் வீணாக்குகிறார்கள். தற்பொழுது நீங்கள் பிரியன்ஸ் ஆர்யா வரையில் எவ்வளவு இளம் திறமைகள் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். ஐபிஎல் எவ்வளவு தரமாக இருக்கிறது என்பது புரியும்+vஎன்று கூறியிருக்கிறார்.

- Advertisement -