ஐபிஎல் 2025..கோடிக்கணக்கில் ஊதியம் பெற்றும் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்கள்:

0
31

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பல வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்தாலும் சில வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இன்னும் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் கடந்த மெகா ஏலத்தில் கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் சென்றும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடப்பு சீசனில் கோடீஸ்வர வீரர்கள் யார் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பதை தற்போது பார்க்கலாம். ஐபிஎல் போட்டியில் முதல் பகுதி தற்போது முடிவடைந்த நிலையில் லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மாயங் யாதவ், இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

- Advertisement -

மாயங் யாதவ், நடராஜனுக்கு வாய்ப்பில்லை:

லக்னோ அணி மாயங் யாதவ்க்கு பதினோரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய மாயங் யாதவ், சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மேலும் மாயங் யாதவ் தற்போது காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார்  எனினும் அவருடைய உடல் தகுதி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில்,மாயங் யாதவ் லக்னோ அணியின் முக்கிய ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதேபோன்று இந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் தமிழக வீரன் நடராஜன். டெல்லி அணி இவரை 10 கோடியை 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் 19 விக்கெட் வீழ்த்திய நடராஜன் மொத்தமாக 61 ஐபிஎல் போட்டிகளில் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

போத்தேல், கோயிட்சேக்கும் வாய்ப்பில்லை:

எனினும் டெல்லி அணி நடராஜனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரவில்லை. டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா ஆகியோர் உள்ள நிலையில் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜாக் போத்தல், ஆர் சி பி அணிக்காக 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு தேர்வான இவர் அதிரடியாக ஆடக்கூடிய இடது கை பேட்ஸ்மேன் ஆவர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. சிஎஸ்கே கதை முடிந்தது.. எஞ்சி இருக்கும் போட்டிக்கு இதையாவது செய்யுங்க.. ஸ்ரீகாந்த் கருத்து

மேலும் சுழற் பந்து வீச்சையும் வீசுவார். கடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் போத்தேல் விளையாடி இருந்தார்.இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்சே. குஜராத் அணிக்காக 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்றிருந்தார். அபாரமான வேகப்பந்துவீச்சாளராக விளங்கும் கோயிட்சே, குஜராத் அணியில் வாய்ப்பு தரப்படவில்லை.

- Advertisement -