இந்திய அணி வரலனா.. அந்த 3 டீம்களும் பாகிஸ்தான் வர மாட்டாங்க.. முன்னாள் பாக் கிரிக்கெட் சேர்மன் வருத்தம்

0
590

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் காலித் மஹமூத் இதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறியிருக்கிறார்.

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்குப் பின்னர் டி20 தொடர்களின் வருகையால் அதில் கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன் டிராபி தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த தொடர் பாகிஸ்தானில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்துமே அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. 19ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தொடர் ஆனது மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இதன் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிக தீவிரமாக செய்து ருகிறது.

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இருக்கிற தூதராக உறவுகளால் இந்திய அணி அங்கு சென்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆன காலித் இந்திய அணியை பாகிஸ்தான் செல்ல விளையாட மறுத்தால், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளும் கூட இந்தியாவின் பாதையில் பயணிக்க வாய்ப்புள்ளது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இந்திய அணி பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பதால், அது அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இந்தியாவின் வழியில் பின்பற்ற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது அடிப்படையில் சாம்பியன்ஷிப்பின் வருவாயை குறைக்கும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் இதற்கான லாபமும் குறையும்.

இதையும் படிங்க:எனக்கு எல்லாமே தோனிதான்.. இந்த விஷயத்தை மொத்தமா மாத்தி அமைச்சதே அவர்தான் – ரிஷப் பண்ட் பேச்சு

விஷயம் இத்தகைய சிக்கல்களில் இருக்கும் போது, மற்ற கிரிக்கெட் வாரியங்களை சம்மதிக்க வைக்க முயற்சி செய்யலாம். ஐசிசியில் இந்தியாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இதனால் பாகிஸ்தான் எந்த உத்தியையும் கடைபிடிப்பது பயனளிக்காது. பிசிசிஐ பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்றும் வெளியே தனது போட்டிகளை விளையாடுவோம் என்று கூறுகிறது. இது ஐசிசி தொடர்களை நடத்தும் பாகிஸ்தானின் நோக்கத்தையே குறைப்பதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -