இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரராக வந்த பொழுது மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்த வீரராக ரிஷப் பண்ட் இருக்கிறான். மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்ததால் அழுத்தத்தை அதிகம் சந்தித்தார். இந்த நிலையில் மகேந்திர சிங் டோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் வெளியிலும் எவ்வாறு உதவியாக இருந்து வருகிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் தோனி விக்கெட் கீப்பர், கேப்டன் மற்றும் ஃபினிஷர் என மூன்று முக்கிய ரோல்களை செய்து வந்தவர். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தது. அதனால் அவரது இடத்தை உடனே நிரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் மிக இளம் வயதில் தோனிக்கு மாற்றாக உள்ளே கொண்டுவரப்பட்டார். அனுபவம் இல்லாததின் காரணமாக அவர் களத்தில் சில தவறுகளையும் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி தோனி என கத்தி அவரை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இதற்காக தனிமையில் அவர் அறையில் அழுததாகவும் கூறியிருந்தார். அதே நேரத்தில் தோனி தனக்கு கிரிக்கெட் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எவ்வளவு பெரிய வழிகாட்டியாக இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “களத்திற்கு உள்ளே மட்டும் கிடையாது களத்திற்கு வெளியேவும் தோனி எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார். எனக்கு சூழ்நிலைகள் சரியில்லாத பொழுது எப்பொழுதும் அவர் உடன் இருந்து வந்திருக்கிறார். மேலும் அவர் நான் சொந்தமாக சிந்தித்து செயல்படுவதற்கு என்னை தொடர்பு ஊக்கப்படுத்திக் கொண்டு வருகிறார்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாளின் முடிவில் நீங்கள் எதைச் செய்ய முடிவெடுப்பதாக இருந்தாலும், உங்களுடன் அவர் இருக்கும் பொழுது உங்களுக்கு அந்த வேலை மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். நீங்கள் அவரிடமிருந்து அந்த நேரத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.ஒரு விக்கெட் கீப்பராக எனக்கு விக்கெட் கீப்பிங் சில கேள்விகள் இருந்தன. அதை எனக்கு அவர் தீர்த்து வைத்திருக்கிறார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் வரையறையை மாற்றியவர்.
இதையும் படிங்க : இந்தியா இல்லனா கிரிக்கெட்டுக்கு ஒன்னும் ஆயிடாது.. பாகிஸ்தான் வந்து ஆடலனா இது நடக்கும் – ஹசன் அலி பேச்சு
நான் இந்திய அணியில் சேர்ந்த பொழுது என்னுடைய வயது 18. ஆனால் நான் ஜூனியர் என்று என்னை யாருமே உணர விடவில்லை. அனைவருமே என்னை மிக நன்றாக நடத்தினார்கள். நான் ஒரு ஜூனியர் என்று என்னை நினைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் என் மீது அவ்வளவு பாசம் காட்டினார்கள்” என்று கூறியிருக்கிறார்