இந்திய கிரிக்கெட்

ஆஸி டெஸ்ட்.. இந்திய அணியும் கோலியும் கலக்குவாங்க.. 5 வருஷமா நான் இத பாக்கறேன் – சைமன் டால் உறுதி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியும் விராட் கோலி மிகச்சிறப்பாக செயல்படுவார்கள் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முக்கிய தடுமாற்றம்

முந்தைய காலகட்ட இந்திய அணிகளை போல் இல்லாமல் தற்போதைய இந்திய அணி சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் மிகுந்த சிரமத்தைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டில் சுழல் சாதகத்தை இந்திய பேட்ஸ்மேன்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாதாரணமான முறையில் இருந்த சுழல் சவாலையே இந்திய பேட்ஸ்மேன்களால் எதிர்கொண்டு திறமையாக விளையாட முடியவில்லை. அவர்கள் மிகவும் மலிவான முறையில் விக்கெட்டை இழந்து தோற்றார்கள்.

- Advertisement -

சைமன் டால் நம்பிக்கை

இது குறித்து சைமன் டால் கூறும்பொழுது “விராட் கோலிக்கு சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிக்கல்கள் இருந்தது. ஆனால் அது அவருக்கு மட்டுமே இல்லை மொத்த அணிக்கும் இருந்தது. சுழலுக்கு ஏற்ற கண்டிஷன் ஆஸ்திரேலியாவில் இருக்கப்போவது கிடையாது. அங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். அதில் விராட் கோலி சிறப்பான முறையில் விளையாடுவார்”

இதையும் படிங்க : நியூஸி 3வது டெஸ்ட்.. தயவுசெய்து இந்த இந்திய வீரர் வேண்டாம்.. காரணம் இதான் – தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

“இந்திய அணி தற்போதைய டெஸ்ட் தொடரை மறந்து விட வேண்டும். அவர்கள் வெளியே சென்று மும்பையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று ஆஸ்திரேலியா செல்லும் பொழுது நம்பிக்கை கொஞ்சம் அதிகரிக்கும். இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். மேலும் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக இருப்பார்கள். விராட் கோலிக்கு கடந்த நான்கு ஐந்து வருடங்களாக வேகப்பந்து வீச்சுக்கு எதிரான பெரிய தடுமாற்றம் எதுவும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by