நியூஸி 3வது டெஸ்ட்.. தயவுசெய்து இந்த இந்திய வீரர் வேண்டாம்.. காரணம் இதான் – தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்

0
2758
Dinesh

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்டு ஒரு வீரரை களம் இறக்க கூடாது என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டி தொடரை இழந்துவிட்டாலும் கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

இலங்கை தென் ஆப்பிரிக்க அணிகளால் நெருக்கடி

தற்போது இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணி அடுத்து 6 டெஸ்ட் போட்டிகளில் நான்கு டிரஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டி இருக்கிறது. இதில் ஐந்து டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணி ஐந்தில் நான்கில் வெல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நான் டெஸ்ட் போட்டிகளை உள்நாட்டில் விளையாடுகிறது. அதே சமயத்தில் இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டிலும், இரண்டு டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டிலும் விளையாடுகிறது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் வித்தியாச வேண்டுகோள்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “தற்போது பும்ராவுக்கு சந்தேகம் இல்லாமல் ஓய்வு தேவைப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் உள்ளே வருவதை நீங்கள் பார்ப்பீர்கள். என்னால் தற்போது இந்திய அணியில் விளையாடி இருக்கும் வீரர்களில் வேறு எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. யாரும்விளையாடாமல் போவதற்கு எந்த காரணமும் தெரியவில்லை”

இதையும் படிங்க : முதல்ல கம்பீர் கத்துக்கிற இடத்துலதான் இருக்காரு.. இந்த தோல்வி இதை செய்யப்போகுது – ரவி சாஸ்திரி கருத்து

“தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றம் மனதில் மிகவும் கனமாக இருக்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்று என்னால் தெளிவாக உறுதியாக இப்பொழுது சொல்ல முடியவில்லை. ஆனால் நான் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் பும்ராவை வெளியில் வைத்துவிட்டு சிராஜைக் கொண்டு வந்து விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -