இந்தியாவில் ஜெயிக்கிறது ஏன் கஷ்டம் தெரியுமா?.. மீறி ஜெயிக்க இந்த ஒரு வழிதான் இருக்கு – மார்ட்டின் கப்தில் பேட்டி

0
302
Guptill

நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெல்வது ஏன்? மிக கடினமான விஷயம் என்பது பேசியிருக்கிறார்.

பொதுவாக கிரிக்கெட் உலகில் உலகக் கோப்பையை வெல்வது எளிது ஆனால் இந்தியாவிற்கு சென்று இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்வது கடினம் என்று கூறப்படும். இறுதியாக இந்திய அணி குக் தலைமையிலான இங்கிலாந்து அணியிடம் இந்தியாவில் வைத்து டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. அதற்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேல் இந்திய அணி உள்நாட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பலம்

இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் உள்நாட்டில் இந்திய அணி டெஸ்ட் வெற்றிகளை தொடர்ந்து பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் எடுத்துக் கொண்டால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இவர்களது பங்களிப்பு மிக அதிகம்.

இன்னொரு பக்கத்தில் வெளியில் இருந்து வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் பெரிய தடுமாற்றத்தை கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டும் சேரும்பொழுது இந்திய அணி உள்நாட்டில் வெற்றி பெறுவதை தடுப்பது மிகப்பெரிய கடினமான விஷயமாக மாறிவிடுகிறது. அதே போல் இந்தியாவில் இருக்கும் கடுமையான வெப்பநிலை வெளிநாட்டு அணியினருக்கு பெரிய பிரச்சினையை கொடுக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் வெல்ல முடியாது

இதுகுறித்து மார்ட்டின் கப்தில் கூறும் பொழுது ” சில நேரங்களில் நீங்கள் இந்தியாவில் எப்பொழுதும் வெல்லவே முடியாது என்று நினைப்பீர்கள். இந்தியாவில் ஒரு பிரச்சனை என்னவென்றால் பந்து ஸ்கொயர் ஆக திரும்பும். அடுத்து அதே பந்து திரும்பாமல் அப்படியே வழுக்கிக் கொண்டு நேராக வரும்”

“எந்த பந்து திரும்ப போகிறது? எந்த பந்து நேராக வரும்? என்கின்ற சிந்தனையிலேயே உங்களை பந்துவீச்சாளர்கள் வைத்திருப்பார்கள்.இதன் காரணமாக நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய ரிதத்தில் மற்றும் உங்களுடைய விளையாட்டு மனநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : ஐசிசி ODI ரேங்கிங்.. 3 இந்திய வீரர்கள் ஆதிக்கம்.. ஆப்கான் குர்பாஸ் வரலாற்று சாதனை.. மாற்றம் கண்ட பட்டியல்

“இந்திய அணிக்கு மேல் முயற்சி செய்வது கடினமான விஷயம். ஆனால் நீங்கள் அதை செய்து மேலே முன்னேற முயற்சிக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்து போட்டியில் ஆழமாகப் போக வேண்டும். இப்படி எல்லாம் சென்றால் மட்டும் தான் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -