சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமன்னுல்லாஹ் குர்பாஸ் புதிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். மேலும் இந்திய வீரர்களின் ஆதிக்கமும் தொடர்கிறது.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடித்திருக்கின்றன. இந்தத் தொடரை ஆப்கானிஸ்தான் இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.
வரலாற்று சாதனை படைத்த குர்பாஸ்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குர்பாஸ் ஒரு சதம் மற்றும் ஒரு பெரிய அரை சதங்கள் அடித்து, ஆப்கானிஸ்தான அணி முதன்முறையாக தென் ஆப்பிரிக்க சர்வதேச போட்டியில் வீழ்த்தியது மட்டும் இல்லாமல் முதல் முறையாக தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் குர்பாஸ் பத்து இடங்கள் முன்னேறி 692 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்கின்ற சரித்திர சாதனையையும் படைத்திருக்கிறார்.
இந்தியன் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம்
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் ரோகித் சர்மா சுப்மன் கில் மற்றும் விராட் கோலி மூவரும் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயமாக தற்சமயம் மோசமான பேட்டி ஃபார்மில் இருக்கும் பாபர் அசாம் முதல் இடத்தில் இருக்கிறார்.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடி சதம் அடித்திருக்கும் டிராவிஸ் ஹெட் ஏழு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்திற்கு வந்திருக்கிறார். அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஐந்தாவது இடத்தில் தொடர்கிறார்.
இதையும் படிங்க: என் குழந்தைகளுக்கு இந்த இந்திய வீரர் ஆடறத காட்டறேன்.. ஏன்னா அவர் பெரிய மாஸ்டர் – இங்கிலாந்து இயான் பெல் பேட்டி
ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியல் :
பாபர் அசாம் – 824
ரோகித் சர்மா – 765
சுப்மன் கில் – 763
விராட் கோலி – 746
ஹாரி டெக்டர் – 746
டேரில் மிட்சல் – 728
பதும் நிஷாங்கா – 708
ரஹமனுல்லாஹ் குர்பாஸ் – 692
டிராவிஸ் ஹெட் – 684
பகார் ஜமான் – 682