இந்திய கிரிக்கெட்

ஏற்கனவே ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சீங்க.. இப்போ இந்த ஷாட் நமக்கு தேவையா.? அவரு தெளிவா பிளான் பண்றாரு – பிரபல வர்ணனையாளர் விளாசல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இக்கட்டான சூழ்நிலையில் போராடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மூன்றாவது போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளர் இயான் ஸ்மித் ரோகித் சர்மா மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமாக விளையாடி அவுட் ஆனதை தொடர்ந்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.

இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி

ஏற்கனவே இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்திருக்கும் நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஓரளவு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என்ற சூழ்நிலையில் விளையாடி வரும் நிலையில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் குவிக்க இந்திய அணி 263 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து 174 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் வெளியேற, 229 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணிக்கு இந்த முறையும் முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். அதில் குறிப்பாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் இருந்த நிலையில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்துள்ள நிலையில் இது குறித்து பிரபல வர்ணனையாளர் இயான் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கேப்டன் விளையாடிய மோசமான ஷாட்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா ஆட்டம் இழந்த விதம் முற்றிலும் தேவையில்லாதது. தேவையே இல்லாத மூர்க்கத்தனமான ஒரு ஷாட்டை அடித்து வெளியேறி இருக்கிறார். ஆரம்பத்திலேயே அவருக்கு ஃபுல் ஷாட் அடித்த விதத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இத்தனைக்கும் அது மோசமான பந்தும் அல்ல. ரோஹித் ஆட்டம் இழந்தவுடன் பந்துவீச்சாளர் மார்ட் ஹென்றி தனது கேப்டனை சுட்டிக்காட்டி ‘எங்களது திட்டம் வெற்றி பெற்றது’ என்று கூறியுள்ளார்” என லான் ஸ்மித் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:7 விக்கெட்.. இந்திய ஏ அணி மீது ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.. இஷான் கிசான் வாக்குவாதம்.. ஆஸ்திரேலியா ஏ வெற்றி

ஃபுல் ஷாட் அடித்து ஆட்டம் இழந்த ரோஹித் சர்மா ஏற்கனவே அதே மாதிரியான ஒரு ஷாட் விளையாடி தப்பித்த நிலையில் திரும்பவும் அதே முறையில் முயற்சி செய்து ஆட்டம் இழந்திருக்கிறார். தற்போது இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் குவித்து விளையாடி வரும் நிலையில், இன்னும் வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்படுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by