இந்திய கிரிக்கெட்

இந்த பிரச்னையை சரி செய்யலனா.. செமி பைனல்ல பெரிய ரிஸ்க் ஆயிரும் – இந்திய முன்னாள் மேலாளர் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணி பலமாக இருந்தாலும் வருத்தப்படக்கூடிய சில விஷயங்கள் இருப்பதாக 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக சாம்பியன் ஆனபோது மேலாளர் ஆக இருந்த ராஜ்புத் இது குறித்து சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு முன்பாக பும்ரா இல்லாதது மற்றும் அணி வீரர்கள் இடையே சில காயங்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளை வைத்துக் கொண்டே இந்தத் தொடரில் விளையாடியது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியும், அதற்குப் பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றியும் பதிவு செய்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், வங்கதேச அணிக்கு எதிராக சில கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் விரைவாக ஆட்டம் இழந்து இருக்க வேண்டிய வங்கதேச அணி 228 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக சில கேட்ச் வாய்ப்புகளை விட்டாலும் அதற்கு இந்திய அணி பெரிய விலை கொடுக்கவில்லை. இருப்பினும் அரையிறுதி போட்டிக்கு முன்பாக இந்த சில விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும் என்று முன்னாள் மேலாளர் ராஜ்புத் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதில் கவனம் செலுத்தணும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆமாம், ஃபீல்டிங்கில் இன்னும் தொடர்ந்து முன்னேற வேண்டும். ஏனென்றால் முக்கியமான கட்டத்தில் கேட்சுகளை விட்டு விட முடியாது. எனவே பீல்டிங் என்பது எப்போதும் செய்யக்கூடிய சிறப்பான ஒரு அம்சம் ஆகும். அரை இறுதி போட்டிக்கு முன்பாக அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்திய அணி நிர்வாகம் எதையும் புதிதாக முயற்சி மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க:இதுதான் கடைசி ஐபிஎல்லா.? டி-ஷர்டில் சஸ்பென்ஸ் வைத்த தோனி.. கண்டுபிடித்த ரசிகர்கள்.. முழு விபரம்

ஏனென்றால் அணி சிறப்பாக செயல்படும்போது அதே வேகத்தில் செயல்படுவது நல்ல விஷயமாகும். சில காயம் ஏற்பட்டாலோ அல்லது யாராவது ஒருவர் ஓய்வெடுக்க விரும்பினாலோ மாற்றங்கள் செய்யலாமே தவிர வெற்றிக் கூட்டணியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று நான் நினைக்கிறேன். எனவே இடையில் ஓய்வு பெற சில நாட்கள் இருப்பதால் இது இந்திய நிர்வாகத்தின் முடிவை பொறுத்ததாகும். மேலும் வெற்றிக் கூட்டணியுடன் செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புவேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by