சோசியல் மீடியாவில் வந்தது உண்மையா.. அப்படிப்பட்ட மோசமான நிலையில் தான் இருக்கிறாரா? – வினோத் காம்ப்ளி வெளியிட்ட தகவல்

0
222
Kambli

இந்திய கிரிக்கெட்டில் 90களில் சச்சின் டெண்டுல்கரை விட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய வீரராக அவருடைய நண்பர் இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தடம் புரண்ட கிரிக்கெட் வீரர்களின் மிக முக்கியமானவராக அதற்கு அடுத்து அவர் மாறிவிட்ட சோகம் நடந்தது. இந்த நிலையில் அவர் நடக்கவே முடியாமல் மிகவும் கஷ்டப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளி முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

- Advertisement -

வினோத் காம்ப்ளி மொத்தம் 17 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1084 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ரன் சராசரி 59. மேலும் நான்கு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 104 போட்டிகளில் 2477 ரன்கள் எடுத்து, இரண்டு சதம் மற்றும் 14 அரை சதம் அடித்திருக்கிறார். இதில் இவருடைய ரன் சராசரி 32.

இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான முறையில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து ஏறக்குறைய ரன் சராசரி 60 என இருந்த பொழுதும் இவரது கிரிக்கெட் வாழ்க்கை கடைசியாக 2000 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை வரும் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. உலக கிரிக்கெட்டின் லெஜெண்ட் வீரர்களில் ஒருவராக உருவாவார் என்று இவரை இந்தியா எதிர்பார்த்தது.

இந்த நிலையில் வறுமையில் இருந்த இவருக்கு சச்சின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் வேலை வாங்கி கொடுத்திருந்தார். அதற்கு அடுத்து மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருந்தும் வந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையில் இருவர் அவரை தாங்கி செல்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ அவருக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது ஆரம்ப காலகட்டத்தில் வந்தது என்று தெரிய வருகிறது. தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் வினோத் காம்ப்ளி கூறும் பொழுது ” சோசியல் மீடியாவில் வரக்கூடிய என் பற்றிய விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியுடன் வரலாற்று வெற்றி.. இங்கிலாந்தை கீழே இறங்கிய இலங்கை.. ODI ஐசிசி ரேங்க் பட்டியல்

மேலும் அவரை நேரில் சந்தித்த அவருடைய நண்பர் மார்க்ஸ் இது குறித்து கூறும்பொழுது “எங்களை அவர் சமீபத்தில் சந்திக்கும் போது நல்ல ஜாலி மனநிலையில் இருந்தார். அவர் மிகவும் நலமுடன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு இப்போது தொப்பை கிடையாது. உணவும் நன்றாக சாப்பிடுகிறார். முழு குடும்பத்துடன் கலந்து கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். அவரது மகன் கிறிஸ்டியானோ அவரது தந்தையைப் போலவே இடதுகை பேட்டர். அவர் தன் தந்தையிடம் பேட்டிங் டிப்ஸகளை தொடர்ந்து பெற்று வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.