இந்திய வீரர் முகமது சிராஜிக்கு எதிராக மைதானத்தில் கூச்சல் இட்டு வரும் ஆஸ்திரேலியா ரசிகர்களை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹெட் மற்றும் முகமது சிராஜுக்கு இடையில் புரிதல் என்பதின் காரணமாக மோதல் உருவானது. பிறகு போட்டியின் போதே இருவரும் அது குறித்து பேசி சமாதானமாகி வெளியில் தெரிவித்து விட்டார்கள். இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா ரசிகர்கள் முகமது சிராஜிக்கு எதிராக பெரிய விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சிராஜ் செய்ததில் ஆச்சரியம் இல்லை
இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஹெட் அதிரடி பேட்டிங் பார்ப்பதற்கு நமக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நிச்சயமாக ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு இது மகிழ்ச்சியாக இருக்காது. மேலும் வேகப் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் ஆக்ரோஷமாக இருக்கக்கூடியவர்கள். ஹெட் அப்பொழுது முகமது சிராஜை ஒரு சிக்ஸருக்கு அடித்திருந்தார்”
“இப்படியான நேரத்தில் ஹெட் விக்கெட்டை கைப்பற்றிய முகமது சிராஜ் கொஞ்சம் நிதானத்தை இழந்துவிட்டார். இதில் நான் ஆச்சரியப்பட எதுவுமே கிடையாது. அதே சமயத்தில் உள்ளூர் பையனான ஹெட் அற்புதமான சதம் அடித்திருந்ததால், அவருக்கு எதிராக சிராஜ் சென்றதால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிராஜுக்கு எதிராக கிளம்பி விட்டார்கள்”
ஆசஸ் தொடரில் என்ன நடக்கும்?
“இப்பொழுது உடனே ஆஸ்திரேலியாவின் புனிதர்கள் எல்லோரும் முகமது சிராஜை விமர்சிக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருவருக்குமே டிமெட்ரி புள்ளிகள் குறிக்கப்பட்டன. மேலும் முகமது சிராஜிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் அது குறித்து பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை”
இதையும் படிங்க : சச்சின்தான் பெரிய பேட்ஸ்மேன்.. விராட் எப்பவும் அவரை தாண்ட முடியாது.. இதான் காரணம் – அக்தர் கருத்து
” நீங்கள் ஒன்றைப் பார்த்தால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஒரு இங்கிலீஷ் வீரருக்கு எதிராக முகமது சிராஜ் போல ஒரு ஆஸ்திரேலியா வீரர் நடந்து கொண்டால், இதே ஆஸ்திரேலியா ரசிகர்கள் அந்த ஆஸ்திரேலிய வீரரை கொண்டாடுவார்கள். தற்பொழுது மீண்டும் ஆஸ்திரேலியா தங்களுடைய பழைய ஆக்ரோஷம் முறைக்கு வர வேண்டுமென்ற செய்திகளை எல்லாம் பார்க்க முடிகிறது. இதில் சிராஜ் மீது இவர்கள் பாய்கிறார்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






