சச்சின்தான் பெரிய பேட்ஸ்மேன்.. விராட் எப்பவும் அவரை தாண்ட முடியாது.. இதான் காரணம் – அக்தர் கருத்து

0
78

கிரிக்கெட் உலகில் விராட் கோலியை விட எப்பொழுதும் சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்மேன் எனவும் அதற்கான காரணம் என்னவெனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த வீரர்கள் அந்தந்த காலகட்டத்தில் விளையாடும் வீரர்களை வைத்து விவாதங்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் அல்லது விராட் கோலி என்பது இப்பொழுதும் விவாதமாக இருந்து வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இதற்கு சோயப் அக்தர் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் காலத்து விவாதங்கள்

சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலகட்டத்தில் இந்தியாவின் சச்சினா? அல்லது கரீபியனின் லாராவா? என்பது பெரிய விவாதமாக சென்றது. அதே காலகட்டத்தில் சச்சின் உடன் இணைத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் ஆகியோரது பெயர்களும் போட்டியில் இருக்கும்.

இறுதியில் இந்த விவாதத்தில் சச்சின் பெயரை பெரும்பான்மையுடன் சிறந்தவர் என நிறுவப்பட்டு இருக்கிறது. அவர் விளையாடிய காலகட்டத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து காலகட்டத்திலும் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் பலராலும் பார்க்கப்படுகிறார். அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் யாருக்கும் வாய்க்காத ஒன்றாக அபூர்வமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சச்சின்தான் எப்பொழுதும் சிறந்தவர்

இது குறித்தான கேள்விக்கு பதில் அளித்து பேசி உள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது “சச்சினை விட விராட் கோலி பெரிய வீரர் என்று நான் எப்பொழுதும் சொல்ல மாட்டேன். விராட் கோலி சச்சினை விட எப்பொழுதும் பெரிய வீரராக ஆக முடியாது. அவர் எப்படி பெரிய வீரராக இருக்க முடியும்?சச்சின் காலத்து தரமான பந்துவீச்சை விராட் கோலி சந்தித்து விளையாடவே இல்லை. இது விராட் கோலியின் தவறு கிடையாது. ஆனாலும் அவர் ஒருபோதும் தரமான பந்துவீச்சுக்கு எதிராக விளையாடவில்லை”

இதையும் படிங்க பும்ரா சிராஜ்.. ஆகாஷ் தீப்பிடம் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லனா கஷ்டம் – புஜாரா விமர்சனம்

“விராட் கோலி டி20 சகாப்தத்தின் வீரர். சச்சின் விளையாடிய சகாப்தம் மற்றும் அவர் எதிர்த்து விளையாடிய திறமைகள் காரணமாக அவர் மிகப்பெரிய வீரர் என்று கூறுகிறேன். ரிக்கி பாண்டிங் கூட சச்சின் காலத்தில் சிறந்த வீரர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அந்த காலத்து வேகம் பந்து வீச்சாளர்களை விளையாடுவது உங்களுக்கு நகைச்சுவையாக இருந்ததா?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -