இந்திய கிரிக்கெட்

34 பந்துக்கு வெறும் 1 சிக்ஸர்.. கில்லுக்கு எங்க சாய் சுதர்ஷன் என்ன குறைச்சல்.. மோசமான செலக்சன் – சடகோபன் ரமேஷ் விமர்சனம்

ஆசியக் கோப்பை இந்திய அணி தேர்வு மிகவும் மோசமான முறையில் இருக்கிறது என இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் எதன் அடிப்படையில் பில் தேர்வு செய்யப்பட்டாரோ, அந்த வகையில் அவரை விட தமிழகத்தில் சாய் சுதர்சன் மிகவும் சரியான வராக இருந்திருப்பார் என்று கூறியிருக்கிறார்.

சாய் சுதர்சன் ஜெய்ஸ்வால் சிறந்தவர்கள்

இதுகுறித்து சடகோபன் ரமேஷ் பேசும் பொழுது “சந்தேகமே இல்லாமல் கில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்சன் இன்னும் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வில் இருபதாவது இடத்தில் கூட சாய் சுதர்சன் பெயரை பரிசீலிக்கவில்லை. கில் மீது காட்டப்பட்ட நம்பிக்கையில் 50 சதவீதம் கூட மற்ற வீரர்கள் மீது காட்டப்பட்டதாக நாங்கள் பார்க்கவில்லை”

“டி20 கிரிக்கெட்டில் யார் ஆபத்தான பேட்ஸ்மேன் என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஜெய்ஸ்வால் என்று அனைத்து பந்துவீச்சாளர்களும் சொல்லுவார்கள். இருந்தாலும் கூட காத்திருப்பு வீரர் பட்டியலில் ஜெய்ஸ்வாலை வைப்பதும், கில்லை துணை கேப்டனாக நியமிப்பதும் கேள்விக்குரியது. வீரர்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவான முரண்பாட்டை நான் பார்க்கிறேன்”

- Advertisement -

எனக்கு உடன்பாடு கிடையாது

“இந்த தேர்வில் எனக்கு உடன்பாடு கிடையாது? தர்க்கரீதியாக யோசித்தால் கில்லை ஏன் தேர்வு செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர் கடைசி பத்து டி20 இன்னிங்ஸ் எடுத்து பார்த்தால் அவர் 30 ஆவரேஜில் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார். மேலும் டி20 வடிவத்தில் ஒரு சிக்ஸருக்கு அவருக்கு 34 பந்துகள் தேவைப்படுகிறது”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் வீரர்களை அலறவிடும் புதிய பிராங்கோ டெஸ்ட்.. மாறும் கடுமையான விதிகள்.. முழு விபரங்கள்

“இதைக் கேட்டால் உடனே தேர்வாளர்கள் இங்கிலாந்தில் அவர் விளையாடிய விதத்தை பாருங்கள் என்று சொல்வார்கள். அப்படி பார்த்தால் இங்கிலாந்தின் நன்றாக விளையாடிய மற்ற இந்திய வீரர்களை என்ன செய்வது? இதை சொல்லவில்லை என்றால் உடனே நாங்கள் ஐபிஎல்-லை பார்த்து தேர்வு செய்தோம் என்று மாற்றி சொல்லுவார்கள்” என விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts