இந்திய கிரிக்கெட்டில் வீரர்களை அலறவிடும் புதிய பிராங்கோ டெஸ்ட்.. மாறும் கடுமையான விதிகள்.. முழு விபரங்கள்

0
76
BCCI

இந்திய கிரிக்கெட்டில் தற்போது யோயோ டெஸ்ட் வீரர்களின் உடன் தகுதியை அறிவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனோடு சேர்த்து பிராங்கோ டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி சோதனையும் நடத்தப்பட இருக்கிறது.

விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றதும் இந்திய வீரர்களின் உடல் தகுதியில் பெரிய கவனத்தை கொண்டு வந்தார். இதன் காரணமாக யோ யோ டெஸ்ட் மிகவும் கடுமையாக மாற்றப்பட்டது. இந்த டெஸ்டில் 17.1 புள்ளிகள் பெற்றால் மட்டுமே தேர்வடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புதிய பயிற்சியாளரின் முடிவு

இப்போது இந்திய அணிக்கு உடற்பயிற்சி மற்றும் கண்டிஷனிங் புதிய பயிற்சியாளராக அட்ரியன் லு ரூக்ஸ் பொறுப்பேற்று இருக்கிறார். தற்போது அவர் இந்திய வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு ரக்பி விளையாட்டில் பின்பற்றப்படும் பிராங்கோ டெஸ்ட் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த டெஸ்டின் மூலமாக வீரர்களின் உடல் தகுதி அதிகரிப்பதோடு அவர்களின் மனநிலையிலும் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் சவால் அடையும் பொழுது அதை எதிர் கொள்வதற்கு தகுதியாக இந்திய வீரர்களை மாற்றுவதற்கு இந்த டெஸ்ட் பயன்படுத்தப்பட இருக்கிறது.

விதிகள் என்ன

தற்போது 20 மீட்டர் 40 மீட்டர் மற்றும் 60 மீட்டர் என இரண்டு கூம்புகளுக்கு இடையே ஓடி திரும்பி வரவேண்டும். இதுபோல மொத்தம் ஐந்து செட்டுகள் செய்ய வேண்டும். இந்த ஐந்து செட்டுகளையும் ஓய்வு இடைவெளி இல்லாமல் ஆறு நிமிடங்களில் கடக்க வேண்டும். அதாவது 1300 மீட்டரை ஆறு நிமிடங்களுக்குள் கடக்க வேண்டும்.

இதையும் படிங்க :

இதேபோல் வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடம் மற்றும் 15 வினாடிகளில் கடக்க வேண்டும். மற்றவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடம் 30 வினாடிகளில் கடக்க வேண்டும் என்று யோயோ டெஸ்டில் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது வீரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -