நேற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார்கள். போட்டிக்கு பிறகு சூரியகுமார் பேட்டிங் பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்ய, அதற்கு உடனடியாக அனில் கும்ப்ளே பதில் அளித்து இருக்கிறார்.
இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சூரியகுமார் யாதவ் நெருக்கடியான நேரத்தில் கொஞ்சம் அதிரடியை குறைத்துக் கொள்ளாமல் 28 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய ஹர்திக் பாண்டியாவும் அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் அதிரடியாக விளையாட 24 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டம் காரணமாகவே நேற்று இந்திய அணி வெற்றி பெற்றது.
சூரியகுமார் யாதவ் பேட்டிங் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “சூரியகுமார் யாதவ் போன்ற டி20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இந்தியாவிற்கு கிடைத்திருப்பது பெரிய நன்மையாகும். பேட்டிங் செய்வதற்கு டிரிக்கியான ஆடுகளத்தில், ரஷித் கான் ஸ்பெல்லில் சூரியகுமார் எப்படி விளையாடினார் என்பது அவருடைய மதிப்பை காட்டக் கூடியதாக இருந்தது.
ஆனால் அவரிடம் விரும்ப தகாத ஒரு விஷயம் என்னவென்றால், அவர் பந்தை உள்வட்டத்தை தாண்டி கேப்பில் பந்தைக் காற்றில் சிப் செய்து ரன்கள் எடுப்பதுதான். ஏனென்றால் அவரது எக்ஸ்கியூஷன் தவறாகும் பொழுது விக்கெட்டை இழந்து விடும் அபாயம் இருக்கிறது” என்று கூறினார்.
இது தொடர்ந்து சூரியகுமார் யாதவ் பற்றி பேசிய அனில் கும்ப்ளே “சூரியகுமார் இந்திய அணியில் இருப்பது பேட்டிங்கில் நான்காவது இடத்தில் தேவையான சக்தியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. நிச்சயமாக இது எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது. ஏனென்றால் சூரியகுமார் யாதவை டி20 கிரிக்கெட்டில் கட்டுப்படுத்துவது கடினம்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு கவலையே கிடையாது.. ஒரே டீம்ல ரெண்டு விராட் கோலி இருக்காங்க – பாக் சோயப் மாலிக் பாராட்டு
நீங்கள் சூரியகுமார் யாதவுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது. மேலும் அவரை பவுண்டரிகள் அடிக்காமல் தடுப்பதும் கடினம்.நிச்சயமாக இது இந்தியாவிற்கு நல்ல விஷயம். அவர் சூப்பர் எட்டு சுற்றில் இப்படி தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






