நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் ஒரு தோல்வியும் அடையாமல் சூப்பர் 8சுற்றுக்கு வந்தது. நேற்று சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியது குறித்து சோயப் மாலிக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக கொண்டு வந்தது பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்கவில்லை. அதே சமயத்தில் மற்ற வீரர்கள் பொறுப்பு எடுத்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த பொழுது, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடிய அணியை விட்டார்கள். அவர்கள் எந்த இடத்திலும் நெருக்கடியை காட்டிக் கொள்ளாமல் விளையாடினார்கள்.
இதேபோல் பந்து வீச்சுக்கு வந்த இந்திய அணிக்கு பும்ரா மிகச்சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 7 ரன் மட்டுமே தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவர் வந்து வீட்டில் உருவாக்கிய அழுத்தம் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு உதவியது.
இதுகுறித்து பேசி இருக்கும் சோயப் மாலிக் கூறும்பொழுது ” விராட் கோலி பேட்டிகள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகள் பல பெற்று கொடுத்தது போல, நான் பந்துவீச்சில் பும்ரா ஒரு விராட் கோலி என்று கூறுவேன்.அவர் எல்லா நிலையிலும் சிறப்பாக பந்து வீச கூடியவர். புதிய பந்து பழைய பந்து மற்றும் எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் அவருக்கு அது பிரச்சனை கிடையாது. அவர் ஒரு முழுமையான பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க : 14வது ஓவர்ல பிரச்சனையே இல்லை.. உங்களுக்கு நான் வேணுமா ரஷித் கான் வேணுமா? – கடுப்பான ஆப்கான் கோச் பதில்
அவர் ஒரு குறிப்பிட்ட பார்மெட்டில் மட்டும் சிறந்தவர் கிடையாது. மூன்று வகையான பார்மெட்டிலும் அவர் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி முடிந்த பிறகு கூட கேப்டன் ரோகித் சர்மா அவரை பாராட்டி பேசி இருந்தார். மற்ற அணிகளிலும் நிலையான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் பும்ரா பெரிய தொடர்களில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காத சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.






