பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் போது மூன்று வடிவ கிரிக்கெட்டலும் சேர்த்து இந்திய அணியின் வேகம் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 400 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் இதையெல்லாம் கடந்து செல்வார் எனவும், அவருக்கு கண்டிஷன் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது எனவும், இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மிகவும் பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
பும்ராவின் தனித்துவ திறமை
பும்ரா மற்ற பந்துவீச்சாளர்கள் போல இல்லாமல் தனக்கு சாதகமற்ற நிலைமையிலும் கூட விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு சிறப்பான வேரியேஷன்களை வைத்திருக்கக்கூடிய பந்துவீச்சாளர். அவரால் ஒரு தட்டையான ஆடுகளத்தில் மெதுவான பந்திலோ அல்லது யார்க்கரிலோ டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட விக்கெட்டை கைப்பற்ற முடியும்.
இதுகுறித்து ஜாகிர் கான் கூறும் பொழுது
“பும்ரா ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பது ஒரு பெரிய சாதனை. ஆனால் இன்னும் ஒரு பந்துவீச்சாளராக செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பும்ரா இதையெல்லாம் தாண்டி இன்னும் துரத்திக் கொண்டே இருப்பார். அவருக்கு அத்தகைய திறமைகள் இருக்கிறது. மேலும் தற்போது அவரை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என அழைப்பதில் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.
எல்லா மைல் கற்களையும் கடப்பார்
மேலும் பேசிய ஜாகிர் கான் கூறும் பொழுது “பும்ரா குறித்த பெரிய நம்பிக்கை என்னவென்றால் அவர் தன்னுடைய உடல்நிலை குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடும்போது பிட்டாகவே இருப்பார். அவர் அதிக போட்டிகளில் விளையாடுவதற்கு தன்னுடைய உடல் திறனை மிகவும் சரியாக பராமரித்து கொண்டிருக்கிறார். எனவே மைல் கற்களையும் கடப்பார்”
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் தோனி ரோகித்துக்கு இடம் தருவோம்.. ஆனா விராட் கோலிய வித்துடுவோம் – வாகன் கில்கிறிஸ்ட் கூட்டு கருத்து
“ஒரு நல்ல பந்துவீச்சாளர் கண்டிஷனை பற்றி கவலைப்பட மாட்டார். அப்படியே கண்டிஷன் பற்றி சிந்தித்தாலும் கூட அந்த நேரத்தில் என்ன பொருத்தமான வேரியேஷனை கொண்டு வரலாம் என்பதற்காக மட்டுமே இருக்கும். உங்களிடம் இருக்கும் வேரியேஷனை எந்த சூழ்நிலைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று தெரிந்திருக்க வேண்டும். இந்த வகையில் பும்ரா மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.