இந்திய கிரிக்கெட்

நம்மில் பலர் தயங்குவோம்.. ஆனா விராட் கோலி இந்த விஷயத்தை கூச்சமே இல்லாமல் செய்வார் – இந்திய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரித்திமான் சகா விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஓய்வை அறிவித்த விராட் கோலி

விராட் கோலி டெஸ்ட் பார்மேட்டை பொறுத்தவரை 9000க்கும் அதிகமான ரன்கள் குவித்து சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பாக தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அணி இக்கட்டான சூழ்நிலைகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகள் அவரது டெஸ்ட் பேட்டிங் பங்களிப்பு போதுமான வகையில் இருக்கவில்லை.

இருப்பினும் அவரது பிட்னஸ் காரணமாக இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு போதுமான அளவு தயாராக இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று விராட் கோலி ஓய்வை அறிவித்து இருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது அவருடன் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சகா விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவரிடம் இயல்பாகவே இருந்தது

இதுகுறித்து அவர் கூறும் போது “எதிராளியின் கண்களைப் பார்த்து ஒருபோதும் விட்டுக் கொடுக்காத அவரது குணம் தான் விராட் கோலி யார் என்று முதலில் காட்டியது. ஒவ்வொரு விக்கெட் விழுந்த பிறகும் கூட ஒளிபரப்பாளர்கள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் விராட் கோலி மீது கவனம் செலுத்தும் போதே இந்த விஷயம் தெளிவாக தெரிந்தது. அவரது அனிமேஷன் வெளிப்பாடுகள் விளையாட்டின் மீது விராட் கோலி எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை துல்லியமாக காட்டியது.

இதையும் படிங்க:2025 WTC பைனலுக்கு.. அதிரடி தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. முதல் முறை வரலாறு மாறுமா?

நம்மில் சிலர் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டுவதில் கூச்ச சுபாவம் இருந்திருக்கலாம். ஆனால் விராட் கோலிக்கு அப்படி இருந்ததில்லை. 19 வயதுக்குட்பட்ட குழந்தை பருவத்தில் இருந்தே விராட் கோலி தான் யார் என்று உலகிற்கு காட்டி இருக்கிறார். ஆனால் அதே அளவிலான ஆற்றலையும் ஆக்ரோசத்தையும் மிக உயர்ந்த மட்டத்தில் பராமரிப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால் அது அவருக்கு இயல்பாகவே இருந்தது” என சகா பேசியிருக்கிறார். விராட் கோலி டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts