மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி வெளியிடப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி ஆரம்பித்து 15ஆம் தேதி வரையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு மாறுமா?
பல காலமாக தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி நடக்கும் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கிடையாது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணியிடம் மோதி தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற புதிய சரித்திரத்தை தென் ஆப்பிரிக்க அணி எழுதுமா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
வலிமையான தென் ஆப்பிரிக்க அணி
தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்த வரை இங்கிலாந்தில் நல்ல முறையில் விளையாடக்கூடிய அணியாக இருந்திருக்கிறது. குறிப்பாக அவர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் ராசியானதாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் டெம்பா பவுமா தலைமையில் பேட்டிங் மற்றும் பௌலிங் யூனிட் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல ஆல் ரவுண்டர்களும் தற்போது கிடைத்திருக்கிறார்கள். எனவே இந்த முறை தென் ஆபிரிக்கா அணி கடுமையான சவாலை ஆஸ்திரேலியா அணிக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் ஓய்வால்.. யாருமே எதிர்பார்க்காத இவங்க தான் பாதிக்கப்பட போறாங்க – தினேஷ் கார்த்திக் பேச்சு
தென் ஆப்பிரிக்க அணி : டோனி டி ஜோர்ஜி, டேவிட் பெடிங்காம், மார்கோ ஜான்சன், மார்க்ரம், வெர்ய்ன்னே, கார்பின் போஷ், ரியான் ரிக்கல்டன், வியன் முல்டர், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சேனுரான் முத்துசாமி, கேசவ் மகாராஜ், டேன் பேட்டர்சன்.