தோனி சொன்ன அந்த விஷயம் அவருக்கே நடந்தா.. அவர் ஓய்வு பெற தேவையில்லை – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

0
125

இந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத் கோஸ்வாமி எம்எஸ் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. கடந்த மூன்று போட்டிகளாக விளையாடாத தொடக்க வீரர் டெவன் கான்வே கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்றாலும் அவரால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. மேலும் அணியின் கேப்டன் ருத்ராஜ் முதல் போட்டியை தவிர மற்ற மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாற, இறுதிக்கட்டத்தில் பேட்டிங் செய்ய வரும் எம்எஸ் தோனியும் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் அவரது முழங்கால் காயம் காரணமாக முன்பு போல அவரால் வேகமாக ஓடி ரன்கள் சேர்க்க முடிவதில்லை. மேலும் பெரிய ஷாட்கள் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் தோனியை சிஎஸ்கே ரசிகர்களே ஓய்வு பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத் கோஸ்வாமி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய முன்னாள் வீரர் கருத்து

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஐபிஎல் என்பது கிரிக்கெட்டை விட இது அணியின் உரிமையாளர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரமாகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தோனி என்னும் பிராண்ட் இன்னும் உயிரோடு உள்ளது. ரசிகர்கள் தோனியை அவரது கிரிக்கெட் திறமைக்காக மட்டுமல்ல, ஒரு தலைவனாகவும், மக்கள் அவரோடு கொண்டிருக்கும் ஒரு ஆழமான தொடர்பிற்காகவும் இன்னமும் தோனியை வணங்குகிறார்கள். தோனியின் பேட்டிங் ஃபார்ம் ஆல் மட்டுமே சிஎஸ்கே அணி தடுமாறிக் கொண்டிருக்கிறதா? உறுதியாக இல்லை.

இதையும் படிங்க:8 வருட ஐபிஎல் தொடரில்.. தன் சிறந்த பவுலிங் பதிவு செய்த சிராஜ்.. சொந்த மண்ணில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி சாதனை

சிஎஸ்கே அணிக்கு ஃபினிஷிங் ஃபயர் பவர் இல்லாதது பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே சிவம் தூபே மாதிரியான இன்னொருவர் அணியில் வேண்டும். விஜய் ஹசாரே டிராபியில் பெங்கால் ஜார்கண்ட் அணியோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நான் தோனியிடம் பேசினேன். அப்போது அவர், யாரும் பார்ம் குறித்து பார்த்ததில்லை அது உள்ளுக்குள் இருந்து வரக்கூடிய விஷயமாகும். உங்கள் உடல் மொழியால் நீங்கள் ஃபார்மில் இருப்பது போல கூட போலியாக செய்யலாம். ஆனால் அதை உண்மையாக உணர உங்கள் மட்டையில் நடுவில் இருந்து ஒரு அடி மட்டும் போதும். எனவே இப்போதும் கூட இளம் வீரர்கள் அவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். எனவே தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -