நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் குஜராத் அணியின் முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார்.
விக்கெட் வேட்டை நிகழ்த்திய சிராஜ்
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி கடந்த மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்க, ஹெட் 8 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை 18 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது சிறப்பான பந்துவீச்சு மூலமாக வெளியேற்றினார். அதற்குப் பின்னர் சிக்கலில் மாட்டிக் கொண்ட சன்ரைசர்ஸ் அணி 50 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் நித்திஷ் ரெட்டி மற்றும் கிளாஸன் ஜோடி ஓரளவு போராடி மீட்டது. இருப்பினும் அவர்கள் இருவரையும் சாய் கிஷோர் வெளியேற்றினார்.
சிறந்த பௌலிங்கை வெளிப்படுத்தி சாதனை
அதற்குப் பின்னர் 18 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த அனிகேத் வர்மாவை எல்பிடபிள்யூ மூலம் முகமது சிராஜ் வெளியேற்றினார். பின்னர் சிமர்ஜித் சிங்கை இரண்டாவது பந்தில் வெளியேற்ற, 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியின் மூலம் 100 விக்கெட்டுகள் ஐபிஎல் வரலாற்றில் வீழத்தி சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. இந்த முறை பஞ்சாப் அணிதான் கோப்பையை வெல்லும்.. அதுக்கு மெயின் காரணம் இதுதான் – யுஸ்வேந்திர சஹால்
இந்தப் போட்டியில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக 8 வருட ஐபிஎல் வரலாற்றில் தனது சிறந்த பந்துவீச்சை சிராஜ் தற்போது பதிவு செய்திருக்கிறார். இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி 21 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை தற்போது முறியடித்து 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 கோடி முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்துள்ளது. தற்போது வெற்றிலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடுவது குறிப்பிடத்தக்கது.






