இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் குழந்தை பிறந்ததால் அதிலிருந்து விலகிய ரோகித் சர்மா தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட பும்ரா அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தார்.
அதுமட்டுமல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அபாரமாக விளையாடி மிகச்சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சூழ்நிலையில் இந்த தொடர் முழுவதுமாக இந்த கூட்டணியை பிரிக்க கூடாது என்று கருத்துக்கள் பரவி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கே எல் ராகுலுக்காக ரோகித் சர்மா தனது இடத்தை தியாகம் செய்வார் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ரோஹித் சர்மா இதை செய்வார்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாம் தற்போது மூத்த வீரராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீரரைப் பார்ப்போம். அவர்கள் பொது அறிவு மற்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த விஷயத்தில் ரோஹித் சர்மாவே கேப்டனாக முன் வந்து செயல்படுவார். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நடந்தது போலவே இதற்குப் பிறகும் நடைபெறும் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க:சச்சினோடு ஒப்பிட்டது தவறு.. அதனாலதான் பிரித்விஷாக்கு இந்த பிரச்சனை உருவாச்சு – ஹர்பஜன் சிங் கருத்து
காயத்திலிருந்து குணமடைந்திருக்கும் கில் அடுத்த போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடுவதை தொடர்ந்து அது வெற்றி விகிதத்தை அதிகமாக உயர்த்தும் என்று நம்புகிறேன். மேலும் ரோகித் சர்மா தொடக்க வரிசையில் விளையாடறதுக்கும் ஐந்தாவது வரிசையில் விளையாடவும் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே முதல் டெஸ்ட் போட்டியை போலவே அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளும் ஒரே மாதிரியாக நடைபெறும்” என்று கூறி இருக்கிறார்.