சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து வலுவாக கட்டமைக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷாவை இந்த ஆண்டு ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பிரித்விஷா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலம் 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற 18வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் துபாயில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பத்து அணிகளும் தங்கள் அணியில் விளையாடிய திறமையான வீரர்களை தக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் நடைபெற்ற மெகா ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்து அணியை கட்டமைத்தது. இந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்காக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா எந்த ஐபிஎல் அணியும் தற்போது நடைபெற்ற முடிந்த ஏலத்தில் வாங்கவில்லை.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான நிலையில் சிறப்பாக விளையாடியதை அடுத்து அந்த ஆண்டு இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி தனது அறிமுக இன்னிங்சில் 134 ரன்கள் குவித்தார். இருப்பினும் அவரது உடல் தகுதி மற்றும் சில ஒழுங்கு நடவடிக்கைகளால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போக தற்போது அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ப்ரித்விஷா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்ன நடந்தாலும் பிரித்விஷா தனது வாழ்க்கையின் அணுகுமுறை குறித்து தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது போன்ற விஷயங்கள் ஒரு தொழிலை உருவாக்கும் அல்லது முடிவுக்கு கொண்டு வரும். மேலும் இனி எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். அவர் இந்த ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனது ஜீரணிப்பது கடினமாக உள்ளது.
இதையும் படிங்க:ரோகித் விஷயத்தில் முட்டாள்தனம் பண்றிங்க.. இதை பண்றது ரொம்ப தப்பு – மைக் ஹஸ்ஸி ஓபன் பேட்டி
இவர் சச்சின் டெண்டுல்கர் போன்று திறமையானவர் என்று மக்கள் சொல்கிறார்கள். இங்கு பிரச்சனை என்னவென்றால் பிரித்விஷாவை சச்சினோடு சீக்கிரம் ஒப்பிடத் தொடங்கி விட்டனர். இதனால் அவர் மீது அதிக அழுத்தம் உருவானது. ஆனால் கிரிக்கெட்டை விடுவதற்கு பிரித்விஷாவுடன் பல காரணிகள் உள்ளன” என்று கூறி இருக்கிறார். எனவே தற்போது மோசமான நிலைமையில் இருக்கும் பிரித்விஷா கடினமாக உழைத்து மீண்டும் ஐபிஎல் அணிலும் இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.