இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ், கௌதம் கம்பீரிடம் சில கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி பெற 124 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு முழுக்க சாதகமாக இருந்ததால் இந்தியா பேட்ஸ்மேன்களால் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட முடியவில்லை. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் நாங்கள் கேட்டபடியே கொடுக்கப்பட்டது என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார். மேலும் இளம் வீரர்கள் சுழற்பந்துவீச்சை விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கும் நிலையில் பின்னர் எதற்காக அதுபோன்ற ஆடுகளம் கேட்கப்பட்டது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இளம் அணியினர் காலப்போக்கில் நிலைமைகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது. பின்னர் எதற்காக இதுபோன்ற ஆடுகளம் கேட்கப்பட்டது? இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு இலங்கை வீரர் தீக்ஷானா வெளியே வந்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆடுகளம் வழங்கப்பட்டதாக கூறினார். அதற்குப் பின்னர் நியூசிலாந்து அணியும் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அனைத்தும் இப்போதைய இந்திய பேட்ஸ்மேன்கள் டர்னிங் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியாது என்பதை காட்டுகிறது அல்லவா?
இதையும் படிங்க:கில் திடீர் காயம்.. பிசிசிஐக்கு அடித்த எச்சரிக்கை மணி.. இந்த மாற்றம் கட்டாயம் வேண்டும் – அபினவ் முகுந்த் கோரிக்கை
ஆடுகள பராமரிப்பாளர்கள் கேட்ட விக்கட்டை கொடுத்தார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக விளையாடும் திறன் இல்லை என்று கூறுவது அர்த்தமற்றது என்று கம்பீர் கூறினார். மேலும் இந்திய அணியை விட தென்னாபிரிக்க அணி அனுபவத்தில் மிகவும் குறைவு. இந்திய ஆடுகளங்களில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில் இரண்டு வீரர்கள் மட்டுமே அணியில் இருந்தார்கள். அதில் ரபாடா இடம்பெறவில்லை. கேப்டன் பவுமா மட்டுமே விளையாடியிருந்தார். இதில் எந்த அணி அனுபவமற்றது என்பதை காட்டுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.