கில் திடீர் காயம்.. பிசிசிஐக்கு அடித்த எச்சரிக்கை மணி.. இந்த மாற்றம் கட்டாயம் வேண்டும் – அபினவ் முகுந்த் கோரிக்கை

0
124
Gill

தற்போது மூன்று வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு வரும் பிசிசிஐ தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக மற்றும் இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

நேற்று முடிவுக்கு வந்த பெண் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் போது இந்திய கேப்டன் சுப்மன் கில் திடீரென காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். அவரால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணிக்கு ரன் பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

பிசிசிஐக்கு எச்சரிக்கை மணி

தற்போது உலக கிரிக்கெட்டில் இந்திய அணி நிறைய போட்டிகளை விளையாடும் அணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வீரர்களின் பணிச்சுமையை மிகவும் புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு இருக்கிறது. அடிக்கடி காயமடையும் வாய்ப்பில் இருக்கும் பும்ராவை சரியான முறையில் முக்கியமான மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சுப்மன் கில்லை மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்கு கேப்டனாக கொண்டுவர முயற்சி செய்கிறது. ஆனால் பணிச்சுமையை அவரது உடலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படையாக அவர் காயமடைந்த விதத்தில் தெரிந்தது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அபினவ் முகுந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கில் நமக்கு வேண்டாம்

இதுகுறித்து அபினவ் முகுந்த் பேசும் பொழுது “சுப்மன் கில்லிடம் மூன்று வடிவத்திலும் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்படுவதற்கான திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அதே சமயத்தில் இனி இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வடிவத்திற்கும் ஒரே கேப்டன் இருக்கக் கூடாது என்றும் நான் கூறுகிறேன்”

இதையும் படிங்க: பவுமாவை பார்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் திருந்தல.. நீங்க சொல்ற குற்றச்சாட்டு மோசமானது – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

“இனிமேல் கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். இங்கு ஒவ்வொரு வீரர்களுக்கும் பணிச்சுமை நிறைய இருக்கிறது. இதன் காரணமாக ஒரு வீரரை மூன்று வடிவத்திற்கும் கேப்டனாக கொண்டு வந்தால் அவரால் அதை சிறப்பாக செய்ய முடியாது. தற்போது கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியும் இப்பொழுது தோல்வியடைந்து இருக்கிறது. இது அவருக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -