சூர்யா பாய் சொல்லிதான் அந்த ஸ்பெஷல் வேலையை செஞ்சேன்.. ஆனா அவர் வச்ச டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல – ரியான் பராக் பேச்சு

0
4769
Riyan

இன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் திரில் வெற்றி சூப்பர் ஓவரில் பெற்றது. இந்தத் தொடரில் எதிர்கால இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ரியான் பராக் மிகவும் நம்பிக்கை அளிப்பவராக தெரிகிறார். இந்த நிலையில் தன்னுடைய பந்துவீச்சில் செய்திருக்கும் ஸ்பெஷல் மாற்றம் குறித்து போட்டிக்கு பின் அவர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் ஐந்து விக்கெட்டுகளை 48 ரன்களுக்கு இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் கில் உடன் ரியான் பராக் இணைய, இந்த ஜோடி 40 பந்துகளில் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்தியா அணி கௌரவமான ஸ்கோருக்கு செல்ல இந்த பார்ட்னர்ஷிப் உதவியது.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் எடுத்ததும் பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ரியான் பராக் சிறப்பாக ஆரம்பித்தார். 18 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் 6 அடிக்க சென்று ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மேலும் இன்று நான்கு ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு இவருடைய பந்துவீச்சு பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. மேலும் இந்த தொடர்பு முழுக்க பந்துவீச்சில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

மிகக் குறிப்பாக ரியான் பராக் ஆப்-ஸ்பின் பந்துவீச்சில் லெக் பிரேக்கை கலந்து சிறப்பாக வீசுகிறார். ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் எதிர்பார்க்காத நேரத்தில் பந்து வெளியே திரும்பி செல்கிறது. இவர் சிறப்பான பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கின்ற காரணத்தினால், இவர் பந்து வீச்சிலும் வேரியேஷன்கள் இருப்பதால், எதிர்காலத்தில் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இவர் முக்கியமான வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசிய ரியான் பராக் “இன்று நான் ஆட்டம் இழந்த விதத்தில் ஏமாற்றமடைந்தேன். நான் இறுதி வரை நின்று விளையாடி இருந்தால் எங்களால் 160 ரன்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் 137 ரன்கள் மட்டும் எடுத்து நாங்கள் பெரும் முயற்சி செய்து வென்றது மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. என்னுடைய பந்துவீச்சை மிகவும் எளிமையாக வைத்திருக்க விரும்பினேன். எனவே இப்படியான ஆடுகளத்தில் ஸ்டெம்ப் டு ஸ்டெம்ப் வீசுவது போதுமானது.

இதையும் படிங்க : சூர்யா என்கிட்ட எறிஞ்சதுக்கு ரொம்ப நன்றி.. 2 ரன் 2 விக்கெட் இப்படி தான் பிளான் பண்ணேன்.. வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி பேட்டி

மேலும் நான் லெக் பிரேக் பந்துவீச்சில் வேலை செய்து வருகிறேன். உள்நாட்டு தொடர்களில் இந்த பந்தை வீசி இருக்கிறேன். மேலும் இதற்கு தனியாக வலை பயிற்சியும் செய்து வந்தேன். சூர்யா பாய் என இப்படியான பந்துகளை வீசச் சொன்னார். நான் அதை வீசும் பொழுது நல்ல முறையில் வெளிவந்தது. சிராஜ் 20வது ஓவரை வீசப் போகிறார் என்று நினைத்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யா பாய் பந்து வீச வந்தார். நாங்கள் கடினமாக விளையாடுகிறோம் ஆனால் நாங்கள் வேடிக்கையாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -