அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இரண்டு நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலம்
இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் 17 சீசன்கள் நடைபெற்று இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நேற்று மற்றும் இன்று துபாயில் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வீரருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக இது அமைந்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்திய நிலையில் அவரது தலைமையில் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் கொல்கத்தா அணி அவரைத்தக்க வைக்காத நிலையில் பஞ்சாப் அணி அவரை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாஸ் ஐயருடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் அதனால் அவளுடன் பணியாற்ற விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு காத்திருக்கும் சவால்
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை சாம்பியனாகிய பிறகு இந்த ஆண்டு சாம்பியன் இல்லாத அணிக்கு கேப்டனாக போகிறார் என சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல் மெகா ஏலம்.. 25 பேர் கொண்ட சிஎஸ்கே அணி.. வீரர்கள் மற்றும் விலை மொத்த விபரங்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஸ்ரேயாஸ் அய்யர் சாம்பியன்ஷிப் வென்ற அணியில் இருந்து எந்த ஒரு சாம்பியன் பட்டத்தையும் இல்லாத பஞ்சாப் அணிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும். ஒருவேளை பஞ்சாப் அணி இவரது தலைமையில் பட்டம் வென்றால் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






