தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் தலைமை பயிற்ச்சியாளர் கௌதம் கம்பீர் மீது அதிக அளவில் விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா கௌதம் கம்பீரை ஆதரித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது. இது கௌதம் கம்பீர் தலைமை பெயர்ச்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நிகழ்த்த காரணத்தால் தற்போது அவர் மீது அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களை இந்திய நிர்வாகம் கேட்டதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதில் விளையாட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தது.
இதனால் இப்படிப்பட்ட ஆடுகளங்களை கௌதம் கம்பீர் தான் கேட்டார் என்பதற்காக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது ராபின் உத்தப்பா அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதாவது முதலில் இது விராத் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா இல்லாத அணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இளம் வீரர்கள் போக போக தங்களை மெருகேற்றி கொள்வார்கள் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பயிற்சியாளர் களத்தில் சென்று விளையாடுவதில்லை. எனவே எழும் விமர்சனங்கள் என்ன மாதிரி என்று எனக்கு புரியவில்லை. மக்கள் தற்போது ராகுல் டிராவிட் பக்கம் இருக்கிறார்கள். இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய அணி சற்று எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கூறினோம். இது கோலி, ரோஹித், அஷ்வின், புஜாரா, ரஹானே இல்லாத அணி. எனவே தற்போது இது ஒரு இளம் அணியாக இருக்கும் பட்சத்தில் நிறைய போராட்ட குணத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் இங்கிலாந்து மண்ணில் தங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள்.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா ODI.. 2 வீரர்களை வச்சு பிசிஐஐ மாஸ்டர் பிளான்.. டி20 WCக்கு கம்பீர் சூப்பர் மூவ் – வெளியான தகவல்
இது இந்திய அணி என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை தவிர்க்க முடியாத விஷயமாகும். அது சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணாக இருந்தாலும் உங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் அளவிட வேண்டும். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் அது இந்த சீசனில் இல்லாமல் அடுத்த சீசனில் இருக்கலாம். எனவே அவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் இது போன்ற கொல்கத்தா ஆடுகளங்களில் விளையாடக் கூடாது” என்று அவர் பேசி இருக்கிறார்.






