தென் ஆப்பிரிக்கா ODI.. 2 வீரர்களை வச்சு பிசிஐஐ மாஸ்டர் பிளான்.. டி20 WCக்கு கம்பீர் சூப்பர் மூவ் – வெளியான தகவல்

0
118
Gambhir

தற்போது இந்திய அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கு, சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி அசாம் மாநிலம் கௌகாத்தி மைதானத்தில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் தொடரின் சுமை

உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் டி20 உலகக் கோப்பையும் அதற்கு அடுத்து 2027 ஆம் ஆண்டு மத்தியில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கின்ற காரணத்தினால். இரண்டு விதமான தொடர்களிலும் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டி இருப்பதால் வீரர்கள் காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இரண்டு வீரர்களுக்கு ஓய்வு

இந்த நிலையில் தற்போது காயத்தில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியாவை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வைக்க இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு விரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. அவரை தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் களம் இறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எப்பவும் ஆதரவாதான் இருப்பேன்.. அந்த மக்கள் எப்பவும் முதுகில் குத்தல – கெவின் பீட்டர்சன் பேட்டி

மேலும் தற்போது பும்ராவை டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்தில் மட்டுமே விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக உறுதியான செய்திகள் வந்திருக்கிறது. எனவே இவர்கள் இருவரும் அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்திய அணியின் துருப்புச் சீட்டான இந்த இரண்டு வீரர்களையும் டி20 உலகக் கோப்பைக்காக பாதுகாப்பதில் இந்திய அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

- Advertisement -