இங்கிலாந்து அணியில் இந்திய முன்னாள் வீரரின் மகன்.. இலங்கை போட்டியில் மாற்று வீரர்

0
1810
Harry

இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 12வது வீரராக இந்திய வீரரின் மகன் களமிறங்கி இருக்கிறார்.

தற்போது மான்செஸ்டர் ஓல்ட் டிராஃப்போர்டு மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தான் இந்திய வீரரின் மகன் இங்கிலாந்து அணியில் 12வது வீரராக இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

ஆர்.பி.சிங் சீனியர்

ஆர்பி.சிங் சீனியர் இடது கை மிதவே பந்துவீச்சாளர் ஆவார். இவர் வலது கையில் பேட்டிங் செய்வார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 1986 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ராஜ்கோட் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் 59 முதல்தர போட்டிகள் மற்றும் 21 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 1520 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 141 ரன்கள் அடித்திருக்கிறார். 1982 முதல் 1996 வரையில் உத்தரப்பிரதேசம் அணிக்காக விளையாடி இருக்கிறார்.இந்த இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளிலும் பங்கேற்றுகிறார்.

- Advertisement -

இந்திய வீரரின் மகன் ஹாரி சிங்

இதற்குப் பிறகு ஆர்பி.சிங் சீனியர் மொத்தமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து விட்டார். இவருக்கு ஹாரி சிங் என ஒரு மகன் இருக்கிறார். இவரும் தன் தந்தையைப் போலவே கிரிக்கெட் விளையாடுகிறான். இங்கிலாந்து கவுண்டி லங்காஷையர் அணிக்கு ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியா இதுல வீக்னு நான் எதிர்பார்க்கல.. அதனால முக்கியமா இந்த வேலையை செய்யப் போறேன்.. இந்திய உதவி பயிற்சியாளர் பேட்டி

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் மூன்று மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இந்த போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே மாற்றுவீரராக ஃபீல்டிங் செய்வதற்கு ஹாரிசிங் களத்திற்கு வந்தார். இதற்கு அடுத்து 37வது ஓவரில் துணை கேப்டன் ஹாரி புரூக்குக்கு பதிலாக மீண்டும் களத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -