ரோஹித் இதை ஓபனா பேசி.. ரொம்ப மரியாதை மிக்கவரா மாறிட்டார்.. இந்த கலாச்சாரம் நமக்கு வேண்டாம் – அஸ்வின் கருத்து

0
197

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரோஹித் சர்மா குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் அபார சதம்

சமீப காலமாக மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வந்த ரோஹித் சர்மா, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 90 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 112 ரன்கள் குவித்தார். இது இந்திய அணி எளிதாக வெற்றி பெற முக்கிய பங்காற்றியது. சமீபத்திய ஆண்டுகளில் ரோஹித் சர்மா தனிநபர் சாதனைக்காக விளையாடாமல் அணியின் நலனுக்காகவே தொடர்ந்து விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

அதற்கு நல்ல உதாரணமாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பையும் கூறலாம். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் ரோகித் சர்மா பார்த்துக்கொண்டார். இந்த சூழ்நிலையில் ரோஹித் அல்லது விராட் கோலி அதிக ரன்கள் குவித்தால் அது வணிகம் ஆக்கப்படும் நிலையில் ரோகித் சர்மா செய்தது போன்று இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் முடிக்கப்பட வேண்டும் என அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

நான் அவரைப் போற்றுகிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரோஹித் சர்மாவின் ஒரு மிகப்பெரிய குணம், அவர் தன்னலம் இன்றி அணியின் நலனுக்காக விளையாடுகிறார். நான் அவரை மிகவும் போற்றுகிறேன். நீங்கள் சுயநலமாக விளையாட நினைத்தால் சுதந்திரமாக விளையாட விரும்ப மாட்டீர்கள். ஆக்ரோஷமாக விளையாட விரும்ப மாட்டீர்கள். அவர் மைல்கற்களை பற்றி கவலைப்படாமல் இன்னும் பெரிய ரன்கள் அடித்துள்ளார். மேலும் போட்டி முடிந்த பிறகு நான் எடுத்த ரன்கள் வணிகமாக்கப்படும், அதனை விடுத்து நான் பாராட்டவும், ஊக்குவிக்கவும் பலர் உள்ளனர் என வெளிப்படையாக பேசினார்.

இதையும் படிங்க:சும்மா சொல்றோம்னு நினைச்சீங்களா.. ரூல்ஸ் மாறாது.. சாம்பியன்ஸ் டிராபிக்கு முக்கிய விதியை கடைபிடிக்கும் பிசிசிஐ..

இது மிகவும் மதிக்கத்தக்க செயலாகும். எனவே சூப்பர் ஸ்டார், சூப்பர் செலிபிரிட்டி கலாச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவிக்க கூடாது. அதனை நாம் இயல்பாக மாற்ற வேண்டும். நாங்கள் நடிகரோ பெரிய ஸ்டார்களோ கிடையாது சாதாரண கிரிக்கெட் வீரர்கள். எனவே ரோகித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவித்தால் அது வணிகம் ஆக்கப்படும். எனவே இதனை கடந்து விஷயங்களை இயல்பாக மாற்ற வேண்டும். எனவே ரோகித் சர்மா இதற்கு முன்னோக்கிச் செல்லும் பாதையை காட்டியுள்ளார். எனவே இந்த வழியில் செயல்பட வேண்டும்” என அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -