சும்மா சொல்றோம்னு நினைச்சீங்களா.. ரூல்ஸ் மாறாது.. சாம்பியன்ஸ் டிராபிக்கு முக்கிய விதியை கடைபிடிக்கும் பிசிசிஐ..

0
442

இந்திய கிரிக்கெட் அணி துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி கிளம்புவதற்கு ஏற்பாடுகள் மிக வேகமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்துள்ள முக்கிய கட்டுப்பாடுகளில் ஒரு விதியை அதிகாரப்பூர்வமாக கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கிளம்ப தயாராகும் இந்திய அணி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி 15 ஆம் தேதி துபாய்க்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் வருகிற 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியாக வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் பிசிசிஐ சில முக்கிய விதிகளை இந்திய வீரர்களுக்கு அறிவித்த நிலையில் அதில் ஒரு முக்கியமாக இந்திய வீரர்கள் 45 நாட்கள் அல்லது அதற்கு அதிகமான நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் வீரர்கள் அவர்களோடு குடும்பத்தோடு இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. துபாய்க்கு பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு தங்க மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்த விதியில் மாற்றம் இல்லை

இதுகுறித்து வெளிவந்துள்ள அறிக்கையின் படி ” ஏதாவது இந்த விதியில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வேறு. ஆனால் இப்போதைக்கு இந்த சுற்றுப்பயணத்திற்கு வீரர்கள் தங்களது மனைவி அல்லது கூட்டாளிகளுடன் வருவதற்கு வாய்ப்பில்லை. மேலும் மூத்த வீரர்களில் ஒருவர் இது குறித்து விசாரித்தார், மேலும் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று அவரிடம் கூறப்பட்டு விட்டது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால் வீரர்கள் குடும்பங்களோடு பயணிக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க:பெஸ்ட் ஐடியா தரேன்.. இந்திய அணியை வீழ்த்த .. இத நெனச்சா வீரம் தானா வரும் – பாக் முன்னாள் கேப்டன்

ஆனால் அதில் சில விதிவிலக்குகள் செய்யப்பட்டால் பிசிசிஐ எந்த செலவையும் ஏற்காது. அந்த தனி நபரே முழு செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது 45 நாட்களுக்கு மேல் இந்தியாவில் இல்லாத வீரர்கள் அவர்களது கூட்டாளிகள் மற்றும் குழந்தைகளை ஒரு தொடருக்கு ஒருமுறை இரண்டு வார காலம் தங்க அனுமதித்துக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -