இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தற்போது தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்திய அணியின் அதிரடி டி20 தொடக்க ஆட்டக்காரராக மாறி இருக்கும் அபிஷேக் ஷர்மா, எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். தான் விளையாடும் முதல் பந்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை ஆடிவரும் இவர், ஐந்து ஓவர்கள் முழுவதாக நின்றாலே போட்டியை இந்தியா பக்கம் மாற்றி அமைக்கும் திறமை படைத்தவராக இருக்கிறார்.
அபிஷேக் ஷர்மாவின் இந்த அதிரடி டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முகமது கைஃப் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரிஸ் கெயில் கூட பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் மேடன் ஓவர்களை விளையாடுவார் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பொதுவாக அபிஷேக் ஷர்மாவை போன்று நிலையாக விளையாடும் வீரர்களை நான் பார்த்ததில்லை. இதுபோல நான் பல நிலையற்ற வீரர்களை பார்த்திருக்கிறேன். இதேபோன்று விளையாடி கெயில் பெரிய ஷாட்களுக்கு செல்வார். ஆனால் கெயில் புத்திசாலித்தனமாக சில மெய்டன் ஓவர்களை விளையாடுவார். பெங்களூர் மைதானத்தில் முதல் ஓவரை கவனமாக விளையாடுவார்.
அங்கு பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் உதவி இருந்தால் முதல் 7 முதல் 8 பந்துகளை மெதுவாக விளையாடிவிட்டு அதன் பிறகு தனது வேகத்தை அதிகரிப்பார். ஆனால் அபிஷேக் ஷர்மா விஷயத்தில் இது அப்படி கிடையாது. இது மாதிரியான பேட்ஸ்மேன்கள் சீறற்றவர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடுவார்கள், அதற்குப் பிறகு மூன்று இன்னிங்ஸ் போராடுவார்கள் அதற்குப் பிறகு மீண்டும் ஒரு இன்னிங்ஸ் சரி செய்து தனது அதிரடியை ஆரம்பிப்பார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 முதல் 13 பந்துகளில் 60 முதல் 70 ரன்கள் வரை இருக்கிறார். அவர் விளையாடினாலே இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலைக்கு தற்போது இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.