இந்திய கிரிக்கெட்

இந்த ஒரு வேலையை செஞ்சாலே.. கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவார்னு ரசிகர்கள் நினைக்கிறாங்க.. ஆனா அது தப்பு – இர்பான் தான்

19வது ஐபிஎல் திருவிழா இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் இதை தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் அனுபவ இந்திய வீரர் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இதுவரை 18 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த சீசனானது மார்ச் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.

மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பஞ்சாப் அணி சிறந்து விளங்கும் நிலையில் அந்த அணியின் யுஸ்வேந்திர சஹால் தனது அனுபவத்தால் அந்த அணிக்கு பெரிதும் கை கொடுத்து வருகிறார். இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவரது ஆட்டம் குறித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சில முக்கிய விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்றால் சகால்தான். ஆனால் அவருக்கு இந்திய அணிகள் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த எண்ணம் அவரது மனதில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சாதாரணமாக ஒரு வீரருக்கு இந்த எண்ணங்கள் வருவது என்பது இயல்பானதே. இந்த எண்ணங்கள் இருந்தபோதே அவர் எங்களோடு வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு கிரிக்கெட் வீரர் விளையாட்டில் தீவிரமாக இருக்கும்போது வர்ணனை செய்ய தொடங்கினால் ரசிகர்கள் அந்த வீரர் ஓய்வு பெறப் போகிறார் என்று எண்ணுகிறார்கள். எனவே யூசி இந்த முறை தனது திட்டத்தில் தீவிரமாகவும் முழு கவனத்தோடும் செயல்பட போகிறார் என்று நினைக்கிறேன். தனது ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்வதோடு தன்னை நிரூபிக்கவும் அவர் தயாராக இருப்பார் என்று தோன்றுகிறது” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by