தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்க அணியின் இளம் வயது வேகப்பந்து வீச்சாளர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தினேஷ் கார்த்திகை கவர்ந்த இளம் வீரர்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. கிரிக்கெட் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் தென்னாப்பிரிக்க அணி கடந்த சில வருடங்களாகவே ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டி வரை வந்து தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இந்திய அணி இடம் தோல்வியடைந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியில் 19 வயது உட்பட்டோருக்கான அணியில் சிறப்பாக விளையாடி தற்போது சர்வதேச அணியில் இடம் பிடித்திருக்கும் 18 வயது வீரரான க்வானா மகாபா தனது பந்துவீச்சு ஸ்டைல் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக கவர்ந்திருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு ரத்தினம் கிடைத்துள்ளது எனவும் அவர்கள் இவரை மிகப் பாதுகாப்பாக முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார்
இதுகுறித்து அவ்வாறு விரிவாகக் கூறும்போது “அவர் ஒரு சிறந்த வீரர், ஏனென்றால் அவர் பந்து வீசும் விதத்தில் அதை காணலாம். நான் எதிர்பார்க்கும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் ஆக வருவதற்கான திறமைகள் அனைத்தும் அவரிடம் இருப்பதாக உணர்கிறேன். தென்னாப்பிரிக்க அணிக்கு தற்போது ஒரு ரத்தினம் கிடைத்துள்ளது. அவர்கள் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் தனது உடலை எந்த அளவில் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்கிற கவனமும் அவரிடத்தில் மிகவும் தேவை.
இதையும் படிங்க:கோலி சச்சின் கூட படைக்காத சாதனை.. வெறும் 172 ரன்னில் உலகின் முதல் வீரராக மாற கில்லுக்கு பொன்னான வாய்ப்பு.. முழு விபரம்
அவர் வளரும் போது நடக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அவர் தனது பந்தயத்தை கைவிடலாம், மேலும் அதை அவர் செய்ய முடியாமலும் போகலாம். ஆனால் அவர் தனது உடலை எப்படி பராமரித்து கொள்கிறார் என்பது மிகவும் முக்கியம். ஆனால் ஒவ்வொரு முறையும் களமிறங்கும் போதும் அவர் தனது மனதளவில் தனது அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். க்வானா மகாபா கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.