இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மான் கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அந்த தொடரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் கில் 172 ரன்கள் எடுத்தால் உலகின் முதல் வீரராக வருவதற்கு அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்திருக்கிறது.
இந்திய இளம் வீரர் சுப்மான் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மான் கில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஓரளவு விளையாடி வந்தாலும் ஒரு நாள் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கில் இரட்டை சதம் அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது துணை கேப்டனாக வலம் வரும் இவர் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவே அறியப்படுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் தனது இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான இவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக விளங்கி வரும் நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் கில் விளையாட உள்ளார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவர் இன்னும் 172 ரன்கள் குவித்தால் வரலாற்றின் முதல் வீரராக ஒரு சிறப்பான சாதனையை படைப்பார்.
வரலாற்று சாதனை படைக்கப் போகும் கில்
அதாவது ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இளம் இந்திய வீரர், இதுவரை 47 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஆறு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் 2328 ரன்கள் குவித்திருக்கிறார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாட உள்ள நிலையில் இன்னும் 172 ரன்கள் எடுத்தால் 50 போட்டிகளுக்குள் 2500 ரன்கள் குவித்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை கில் படைப்பார். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 53 ஒரு நாள் போட்டிகளில் 2500 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. விராட் கோலிதான் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனா? பயிற்சியாளர் கூறிய முக்கிய தகவல்.. முழு விபரம்
எனவே வேறு யாரும் இந்த சாதனையை படைக்காத நிலையில் கில்லுக்கு இந்த அபார சாதனையை படைக்க ஒரு பொன்னான வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரது இடம் சற்று கேள்விக்குள்ளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் விளையாடத் தவறினால் அவருக்கு பதிலாக இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இடம்பெறலாம். விராட் கோலி சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை கில் படைப்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.