என்ன விதி இது.? ஒரு வீரருக்கு 150 கிலோவுக்கு என்ன தேவை.. பிசிசிஐ விதித்த விசித்திர விதி – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
363

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து 10 வருடங்களுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை ஆஸ்திரேலியா அணியிடம் ஒப்படைத்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த புதிய விதிமுறைகள் குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ விதித்த புதிய விதிமுறைகள்

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில் அதற்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மீது அதிக அளவிலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. அதாவது இந்திய வீரர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் எனவும் தனியாக பயணம் செய்து வரக்கூடாது எனவும் ஒரு வீரர் எடுத்துச் செல்லும் 150 கிலோ வரையிலான அவரது பொருட்களுக்கு பிசிசிஐ பயண கட்டணம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் சோப்ரா ஒரு வீரருக்கு 150 கிலோ வரை பொருள்கள் தேவைப்படுமா? என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கேள்வி

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது “எல்லா வீரர்களும் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்கிற விதிமுறை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இது எப்போதும் வழக்கமான இருக்கும் விதிமுறை தானே. தற்போது பிசிசிஐ அதனை புதிதாக கொண்டு வந்திருக்கிறது என்றால் அதனை யார் மாற்றினார்கள் என்று கண்டுபிடிப்பது மதிப்புக்குறியது.

இதையும் படிங்க:ரோஹித் மாதிரி விராட் இந்த சான்ஸ் யூஸ் பண்ணனும்.. ஆனா அவர் பண்ண மாட்டாரு – டிடிசிஏ செயலாளர் பேட்டி

என் கண்ணில் பட்ட மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரு வீரர் சுற்றுப்பயணத்தில் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு 150 கிலோ வரை பிசிசிஐ பணம் செலுத்த வேண்டும், அதற்கு மேல் வீரர் செலுத்த வேண்டும் என்பது. கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஒரு வீரருக்கு எதற்காக 150 கிலோ வரையிலான பொருட்கள் தேவைப்படுகிறது. எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிட் பேக் 40 கிலோவுக்கு மேல் இருக்காது. மேலும் அதில் இருக்கும் 15 பேட்களும் 20 கிலோவுக்கு கீழ் இருக்கும். மீதம் 110 கிலோவுக்கு துணிகள் இருக்குமா? மேலும் அதற்கு மேல் இருக்கும் கிலோவுக்கு வாரியம் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -