ரோஹித் மாதிரி விராட் இந்த சான்ஸ் யூஸ் பண்ணனும்.. ஆனா அவர் பண்ண மாட்டாரு – டிடிசிஏ செயலாளர் பேட்டி

0
34

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது நடைபெற்று முடிந்த நிலையில் அதில் இந்திய அணி மோசமாக விளையாடி பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த சூழ்நிலையில் டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அசோக் ஷர்மா விராட் கோலி குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சீனியர் வீரர்களின் மோசமான ஃபார்ம்

விராட் கோலியின் பேட்டிங் பார்ம் சமீப சில ஆண்டுகளாகவே மோசமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி அதற்கு பிறகு நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார். இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் ஒரே ஒரு சதம் அடித்த நிலையில் அதற்கு பிறகு 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து பார்வையாளர்களை வெறுப்பேற்றினார். விராட் கோலி மட்டுமல்லாமல் ரோகித் சர்மா மற்றும் சில பெரிய வீரர்கள் மோசமான முறையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடினார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஆன ரோகித் சர்மா இழந்த தனது பேட்டிங் ஃபார்மை மீட்கும் வகையில் மும்பையில் ரஞ்சி டிராபி பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். ரோகித் சர்மா கிரிக்கெட் அகாடமியில் விளையாடி பயிற்சி பெறும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அசோக் சர்மா மும்பை வீரர்களிடமிருந்து உத்வேகம் பெற்று விராட் கோலி டெல்லி ரஞ்சி தொடரில் பங்கு பெற வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி இதை செஞ்ச ஆகணும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பயிற்சி பெறும் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ரஞ்சி ட்ராபிக்கான பயிற்சி முகாம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி மும்பை வீரர்களிடமிருந்து உத்வேகம் பெற்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். மும்பையில் பாருங்கள். வீரர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க:நான் நம்புறேன்.. இன்னும் 1 மாசத்துக்குள்ள பும்ராவுக்கு அது கண்டிப்பா நடக்கும் – பாக் வக்கார் யூனிஸ் பேட்டி

இது மற்ற பகுதிகளில் இருக்கும் நிலையில் வடக்கில் அதிலும் குறிப்பாக டெல்லியில் இல்லை. உள்நாட்டு போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. என்னை பொருத்தவரை விராட் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 4 போட்டிகளில் ஒரு போட்டியில் ஆவது விளையாட வேண்டும். ஆனால் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது” என கூறி இருக்கிறார்.

- Advertisement -