தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிந்ததும் நீங்கள் யாரையும் முயற்சிக்கவில்லை என்று வருத்தப்படுவீர்கள் – ஆகாஷ் சோப்ரா

0
49

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மே 29ஆம் தேதி அன்று நிறைவு பெற இருக்கின்றது. பின்னர் ஜூன் 9ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க இருக்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று வெளியானது.அது சம்பந்தமாக சரமாரியான கருத்துக்களை தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா எடுத்து வைத்துள்ளார்.

நீங்கள் யாரையும் முயற்சிக்கவில்லை என்று பின்னர் வருத்தப்படுவீர்கள்

18 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் வெளியானதும் அது சம்பந்தமாக ஆகாஷ் சோப்ரா ஒரு சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். 18 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்திருந்தாலும் அதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். வாய்ப்பு கொடுக்க வேண்டிய சரியான சூழ்நிலை அமைந்து வரும் வேளையிலும் வாய்ப்புக் கொடுக்க வேண்டிய நேரத்தில் வாய்ப்பு கொடுக்காமல் போக வாய்ப்பு உண்டு. பின்னர் தொடர் முடிந்தவுடன் வாய்ப்பு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப் படுவீர்கள்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா விற்கு பேக்கப் வீரராக வெங்கடேஷ் ஐயர் விளையாடுவார். நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் நுழைந்திருக்கிறார். ரிஷப் பண்ட்டுக்கு பேக்கப் வீரராக அவர் இனி இருக்கப் போகிறார்.

ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 ஸ்பின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர். அதில் மூன்று ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சாளர்களும் ஒரு ஃபிங்கர் ஸ்பின் பந்து வீச்சாளரும் உள்ளனர். ரவி பிஷ்னோய் அணியில் இருக்கிறார். இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் பிஷ்னோய் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எனக்கு 100% நம்பிக்கையே இல்லை என்றும் கூறியுள்ளார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா இல்லாத நேரத்தில் தற்போது கேஎல் ராகுல் அணியை வழிநடத்த போகிறார்.ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 அணி – கேஎல் ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர்,சஹால், குல்தீப் யாதவ், அக்சர் படேல்,பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.