கோலி வெறுப்பாளர்கள் ஓய்வு எடுங்கள்.. 15 வருஷமா நீங்க இத கவனிக்கவே இல்ல – அஜய் ஜடேஜா பேட்டி

0
324

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு அற்புதமாக சதம் அடித்தார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நன்றாக பேட்டிங் செய்து இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற தொடரில் பெரிதாக பேட்டிங்கில் செயல்படாத நிலையில் சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆறு இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 93 ரன்கள் மட்டுமே குவித்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் மீது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 ரன்னில் வெளியேறினாலும், அதற்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு சதம் அடித்து ஒட்டுமொத்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விராட் கோலி ஒரு மேதை எனவும் விராட் கோலியின் வெறுப்பாளர்கள் இப்போதாவது நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெறுப்பாளர்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி என்ற பெயர் இப்போது அனைத்தையும் கூறுகிறது. விராட் கோலி மீது விமர்சனம் செய்தவர்கள் எவரேனும் இருந்தால் இப்போது நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். மேதைகள் எப்போதுமே ஒரே இரவில் பிறக்க மாட்டார்கள். அவர்கள் உருவாக பல ஆண்டுகள் எடுக்கும். விடாமுயற்சி கடின உழைப்பினால் மட்டுமே அவர்கள் உருவாகிறார்கள். இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அவரது அர்ப்பணிப்பை பார்த்திருப்பீர்கள்.

இதையும் படிங்க:நான் மும்பை இந்தியன்ஸ்.. ஆனால் விராட் தான் ஐடியல்.. இந்த முறை அவர்கிட்ட இதை செய்வேன் – நமன் திர் பேட்டி

மக்கள் ஒரு நிகழ்வு அல்லது ஒரு தொடரின் மூலம் வீரர்களை மதிப்பிடத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு மேதையை எப்போதும் மதிப்பிடக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது” என்று விராட் கோலி குறித்து கூறுகிறார். முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடினாலும் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த 100 ரன்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -