நான் மும்பை இந்தியன்ஸ்.. ஆனால் விராட் தான் ஐடியல்.. இந்த முறை அவர்கிட்ட இதை செய்வேன் – நமன் திர் பேட்டி

0
138
Virat

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி 5.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நமன் திர் ஐடியல் வீரர் விராட் கோலி என கூறியிருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இவருக்காக சென்றன. இறுதியாக இவர் இந்த வருடம் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவருடைய சொந்த மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பஞ்சாப் மாநில டி20 வளர்ச்சி

தற்போது இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடரில் நடப்பு சாம்பியன் ஆக பஞ்சாப் இருந்து வருகிறது. அந்த அணியில் அபிஷேக் ஷர்மா பிரப்சிம்ரன் சிங், நெகேல் வதேரா, நமன் திர், ஹர்பிரித் பிரார், அன்மோல் ப்ரீத் சிங், ரமன்தீப் சிங், அர்ஸ்தீப் சிங் என பல அதிரடியான வீரர்கள் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுகிறார்கள்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் டி20 தொடர் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் அணி நமன் திர் திறமையை கண்டறிந்து கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கி வாய்ப்புகள் கொடுத்தது. இந்த வருட ஐபிஎல் தொடரின் கடைசியில் பினிஷிங் இடத்தில் மிகச் சிறப்பாக அவர் விளையாடி இருந்தார். எனவே மீண்டும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

- Advertisement -

என் ஐடியல் வீரர் விராட் கோலி

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் நமன் திர் கூறும் பொழுது “நான் விராட் கோலியை அதிகம் பின்பற்றுகிறேன். அவருடைய மதிப்புமிக்க நெறிமுறைகள், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை நான் அதிகம் பின்பற்றுகிறேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துரதிஷ்டவசமாக அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் நான் அவருடன் 100% பேசுவேன்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் சச்சின் கிடையாது.. என் கணிப்பை அவர் உடைச்சிட்டாரு – தினேஷ் கார்த்திக் பேட்டி

“ஆர்சிபி ஆரம்பத்தில் என்னை ஏலம் எடுத்தது. நடுவில் பஞ்சாப் வந்தது. இரண்டு அணிகளுக்குமே ஏன் நான் செல்ல விரும்புகிறேன். ஏனென்றால் ஆர்சிபி அணியில் விராட் கோலி இருக்கிறார். பஞ்சாப் என்னுடைய பிறந்த மாநிலம். விராட் கோலி நாட்டின் கதாநாயகனாக இருப்பதால் அவருடன் உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கிறது. மேலும் நான் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி இருப்பதால் அது எனக்கு குடும்பம் போன்ற உணர்வையும் தருகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -